பண்டைய கால போர்க் கவசம்

Image result for chola warriorsபண்டைக் காலத்தில் போருக்குச் சென்ற அரசர்களும், வீரர்களும் எதிரிகளின் கணை, வாள் மற்றும் ஈட்டிகளின் தாக்குதலிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள அணிந்துகொள்ளும் உடைகளே கவசங்கள் எனப்பட்டன. அந்தப் பாதுகாப்பு கவசங்கள் மரம், விலங்குகளின் தோல் மற்றும் உலோகங்களினால் ஆனவை.

அவற்றின் பெயர்கள் மற்றும் வகைகள் பின்வருமாறு கூறப் படுகிறது

 

அணியும் இடத்தைப் பொறுத்து கவசங்களின் வகைகள்:

சிரசுதிராணம் : வீரர்கள் தலைக்கு மட்டும் அணியும் கவசம். போரில் ஈடுபடும் யானை மற்றும் புரவிகளின் நெற்றியில் அணிவிக்கப் படும்.

Image result for ancient greek warriors armor
சிரசுதிராணம்

கண்டதிராணம் : கழுத்துக்கு மட்டும் அணிவது. கண்டதிராணம் பெரும்பாலும் புறவிகளுக்கும், யானைகளுக்கும் மட்டுமே அணிவிக்கப் பட்டிருக்கும்.

கண்டதிராணம் (புரவி மற்றும் வீரனின் கழுத்தில் அணிந்திருக்கும் கவசம் )

கூர்ப்பாசம் :  தோள்களுக்கு அணிவது.

Related image
கூர்ப்பாசம்
கஞ்சுகம் : முழங்கால் வரையான கவசம்

Related image
கஞ்சுகம் (தொடைக்கு மேல் அணிந்திருக்கும் கவசம் )

வாரபாணம் : கால்களுக்கு அணிவது.

Related image
வாரபாணம்

பட்டம் : கைகள் இல்லாத உடல் கவசம்.

http://ep.yimg.com/ay/yhst-87491460501412/spartan-armor-bronze-2.gif
பட்டம்

நாகோதரிகம் : கைகளுக்கு மட்டும் அணிவது.

Image result for ancient warriors
நாகோதரிகம்

கவசங்களின் வகைகள்:

லோகசாலம்: இது இரும்பினால் சல்லடைப் போன்று அமைக்கப்பட்டிருப்பது.   தலைக் கவசத்தோடு உடலுக்கு இரும்பு வலை போல் அமைக்கப்பட்டிருக்கும் கவசம்.

Image result for kattappa hd
லோகசாலம்

சாலிகை : தலைக்கு மட்டும் அணிந்திருக்கும் இரும்பு வலைக் கவசத்திற்கு சாலிகை என்று பெயர்.

லோக பட்டம் : கைகள் இல்லாத உலோக கவசம். உடலுக்கு மட்டும் அணிவது.

Related image
லோக பட்டம்

கவசங்களின் தயாரிப்பு :

பொதுவாக சிம்பு மாரம், கட்க மிருகம், தேனுக மிருகம், யானை, எருது ஆகியவற்றின் தோல், எலும்பு மற்றும் கொம்பு ஆகியவற்றின் மூலம் கவசம் செய்யப் படுகிறது.

Image result for eva green 300 battle of artemisia
கிடிகம்
http://img08.deviantart.net/f2e7/i/2015/109/1/3/wood_elf_leather_armor_by_lagueuse-d6xwa69.jpg
பேடி அல்லது தாலமூலம் அல்லது சுவோடம்

இவற்றில் மரத்தினால் செய்யப்படும் கவசம் பேடி என அழைக்கப்படும். பேடியை  தாலமூலம் மற்றும் சுவோடம் எனவும்  அழைக்கலாம். தோலால் செய்யப்படுவது சருமம் மற்றும் கிடிகம் என அழைக்கப் படும். கெட்டிக் கயிறுகளை இணைத்து செய்யப்படும் கவசத்திற்கு தமனிகம் என்று அழைக்கப்படும். இக்கவசங்களின் ஓரங்களில் இரும்பைப் பொருத்தினால் வலாககாந்தம் என சிறப்புடன் அழைக்கப்படும்.

 

சி.வெற்றிவேல்,

சாளையக்குறிச்சி.

3 COMMENTS

  1. நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் எழுத்துக்களை காண்பதில் மகிழ்ச்சி. பயனுள்ள பதிவு. பழந்தமிழர் பெருமையை இவ்வுலகிற்கு பறைசாற்றும் பதிவு. இன்னும் நிறைய தகவல்களை உங்கள் தேடல்களில் இருந்து எதிர்பார்க்கிறேன். எழுத்துப் பிழைகளையும் சற்றுக் கவனியுங்கள் #புறவிகளுக்கும். வாழ்த்துக்கள் தோழனே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here