விறல்வேல் வீரனுக்கோர் மடல்: 02 – பதில் கடிதம்

பேரன்புள்ள நண்பனுக்கு,
வணக்கம்.
நண்பா, உனது இல்வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டிருக்கிறது என்பதை தங்கையுடன் பேசியபோதே கண்டறிந்துவிட்டேன். அதன் பயனாகத்தான் நீ இப்பொழுது வாழ்வின் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறாய். முதலில் உனக்கு நான் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறன். நீ தந்தையாகி வாழ்வு நிறைவடையப் போவதை அறிந்து அகம் மகிழ்ந்தேன். மீண்டும் வாழ்த்துக்கள்.

மேலும் படிக்க…

‘வானவல்லி’ நாயகன் வெற்றியுடன் ஒரு நேர்காணல்!

வணக்கம் வலைத்தள வாசகர்களே!
‘வானவல்லி’ நமது வலைத்தள நண்பர் சாளையக்குறிச்சி சி.வெற்றிவேல் அவர்களின் எண்ணத்தில் கருவாகி கைவண்ணத்தில் உயிராகி வெளிவந்திருக்கும் வரலாற்றுப் புதினம். ‘வானவல்லி’க்காக ஒரு நேர்காணல் வேண்டும் என நண்பர் வெற்றியிடம் கேட்டேன். ‘ஆகட்டும்’ என உடன் ஒப்புக் கொண்டவர் பதில்களை ‘வானவல்லி’ வெளியானதும் தருகிறேன் என்று கூறினார்.
அத்துடன் ‘நண்பா, நான் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் மாணவப் பத்திரிக்கையாளராக பணியாற்றியபோது ஒரு விடயத்தை அறிந்து கொண்டேன். அதாவது நமது கேள்விகள் மட்டுமே நேர்காணல் கொடுப்பவரை மட்டும் அல்லாமல் நம்மையும் வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்தும் என்று. ஆதலால் வழக்கமாக தொடுக்கப்படும் கேள்விகள் மட்டும் அல்லாமல் வாசிப்பவரையும் தூண்டும் விதத்தில் கேள்விகள் அமைவது சிறப்பு.’ என்று ஆலோசனையும் கொடுத்தார்.

மேலும் படிக்க…

விறல்வேல் வீரனுக்கோர் மடல் – 02

அன்பு நண்பன், உடன் பிறவா சகோதரன் வானவல்லி நாயகன் வெற்றிவேல் – அவர்களுக்கு சிகரம்பாரதி எழுதும் பதில் கடிதம். நலம், நலமறிய ஆவல்.

நண்பா இப்படியும் ஒரு நண்பனா என்று சிந்திக்க வைத்த ஒரு நண்பன் நீ. நம் நட்பு முகம் பாராது எழுத்தைப் பார்த்து வந்த நட்பு. எழுத்துக்களைப் பற்றிய விடயங்களைப் பகிர ஆரம்பித்து இப்போது தனிப்பட்ட விடயங்களைப் பகிர்ந்து கொள்ளுமளவுக்கு நீண்டிருக்கிறது எம் நட்பு. வைபரின் புண்ணியத்தில் முகம் பார்த்துக் கொண்டோம். வாட்ஸப்பின் உபயத்தில் உரையாடிக் கொண்டிருக்கிறோம். இணையம் தந்த இணையற்ற நட்பு உன் நட்புதான். உன்னைப் போன்றே இலங்கைக்குள் எனக்குக்  கிடைத்த நட்புதான் ‘அதிசயா’. நினைவிருக்கும் என நம்புகிறேன். அவரையும் இன்னும் நேரில் காணும் வாய்ப்புக் கிட்டவில்லை. நான் தமிழகம் வரும் வேளை முதலில் உன்னைத்தான் சந்திக்க விரும்புகிறேன். இவ்வளவு நெருக்கமாய் நம் நட்பு அமையக் காரணம் எது? தெரியவில்லை. ஆனால் பிரிவொன்று நேர்ந்துவிடக் கூடாது என்பது மட்டுமே என் பிரார்த்தனை.

மேலும் படிக்க…

காலக்கணக்கில் குழம்பிய காலதேவன்

பேருந்தில் அமர்ந்திருந்தேன்…

நடக்க முடியாத கிழவர் ஒருவர்
‘தர்மம் செய்யுங்க சாமீ’
என்று காலில் விழுந்தார்.

பத்துரூபாயை எடுத்துக் கொடுத்தேன்.

‘உங்க தலைமுறையே நல்லா இருக்கும்’
என்று வாழ்த்திவிட்டுச் சென்றார்.

அவர் கடந்து சென்றதும்
வயிறு வீங்கிய பெண் ஒருத்தி வந்தாள்.
ஐந்து ரூபாயை எடுத்துக் கொடுத்தேன்.

‘உங்க குழந்தை நல்லா இருக்கும்’
என்றபடி கடந்து சென்றாள்.

நெற்றி நிறைய அப்பிய மஞ்சள், குங்குமம்
நாக்கில் குத்தியிருந்த நீண்ட அலகு
கழுத்தில் தொங்கிய ருத்ராட்ச மாலை…
பாதி கூட நிரம்பியிராத உண்டியலை
முகத்திற்கு முன்பு நீண்ட நேரம் குலுக்கிக் கொண்டிருந்தாள் அம்மன்.
பைக்குகள் கையை விட்டு
கடைசி இரண்டு ஒரு ரூபாய் நாணயங்களை
உண்டியலுக்குள் போட்டேன்.
‘இரண்டு ரூபாய் தானா???’ என அம்மன்
‘ஏளனப் பார்வை’யுடன் கடந்து சென்றாள்…

மார் பெருத்த மங்கை இடுப்பில் குழந்தையுடனும்,
வீங்கிய கால்களைத் துணியால் சுற்றி
தேய்த்துக் கொண்டே வந்த இளைஞன்,
முடி நிறைந்திருந்த மார்புடன்  கீழ் வயிறு தெரிய
அரைகுறையாக சேலை உடுத்திய திருநங்கைகள்,
‘அண்ணா… அண்ணா…’ என்று பேருந்து நகரும் வரை
நம்பிக்கையுடன் காத்திருந்த சிறுவன் என
யாரையும் நான் திரும்பிக் கூட பார்த்திருக்கவில்லை.

கையில் படிப்பதைப் போன்று பாசாங்கிற்கு வைத்திருந்த
புத்தகத்திற்குள் எப்போதோ தொலைந்து போயிருந்தேன் நான்.

முன்னவர்கள் என்னை வாழ்த்திவிட்டுச் சென்றார்கள்.
பின்னவர்கள் தூற்றிவிட்டுச் சென்றார்கள்…

இப்போது கால தேவனும்
நிச்சயம் தடுமாறிக் கொண்டிருப்பான்
என்னைப் போன்றே …

என் ஏட்டுக் கணக்கில்
தர்மத்தைக் கூட்டுவதா அல்லது
கழிப்பதா என்று!!!

சி.வெற்றிவேல்,
சாளையக்குறிச்சி…