சிறுகதைப் போட்டி – 26 : முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் – மாலா ரமேஷ்

என்றுமில்லாத சந்தோஷம் சங்கீதாவுக்கு.  வெயில் லேசாக எட்டிப்பார்த்து…, கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடித்த சமயம்.  பால்கனியில்  முதல் நாள் உலர வைத்த துணிகளை க்ளிப்பிலிருந்து  விடுவித்துக்கொண்டிருந்தாள்.

“க்ளிச்சிக்”  என்ற  ஒலியுடன்  கீழே விழுந்தது ஒரு மஞ்சள்  நிறக் க்ளிப்.

யாராவது தெரிந்த முகம் இருந்தால், கீழிருந்து மேலே   போடச் சொல்லலாமேயென்ற  எண்ணத்துடன்,  எட்டிப்பார்த்தாள். யாரும் இல்லை.  “சரி…  நாமே போகலாம்  “ என்று  நினைத்துப் படிகளில் இறங்கினாள்.

சிறுகதைப் போட்டி – 25 : அழகு எனப்படுவது யாதெனில் – தேவி பிரபா

காலையில் எழுந்ததிலிருந்தே சிவகாமி பரபரப்பாகக் காணப்பட்டாள்.” ஏன் இப்படிப் பரபரப்பாயிருக்கிறே ? ” என்ற  மனோகரனின் கேள்விக்கு ,
” நான் எப்போதும் போலத் தானே இருக்கேன்  ”  என்றபடியே , சமைப்பதில் கவனம் செலுத்தினாள்.
‘ ம்ஹ்ம் … இவ இப்படி எண்ணி எண்ணி பேசுற ஆள் இல்லையே ? பேசுறதுக்குப் பிறந்தவ மாதிரி , வாய் வலிக்கப் பேசுறவளாச்சே ! ஒரு கேள்விக்கு ஒம்பது பதில் சொல்லுறவளுக்கு என்னாச்சு ? … இன்னிக்கு ஏதும் விசேச நாளா ? … பிறந்த நாளாயிருக்காது ! அதை மறந்ததுக்குப் போன மாசமே திட்டு வாங்கியாச்சு !  கல்யாண நாளுமில்ல . அதுக்கு   இன்னும் இரண்டு மாசமிருக்கு .    அவக்கிட்டே எதையாவது செய்யறதாச் சொல்லி மறந்திட்டேனோ ?…  ‘ என்றெண்ணினான் .

சிறுகதைப் போட்டி – 24 : தோள் மேல் சின்ன பனித்துளி – ஸ்டெல்லா மேரி எம். ஜே. 

வானில் கார்மேகங்கள் சண்டையிட்டுக் கொள்ள, வாணியோ காலையில் கைவலிக்க துவைத்த துணிகளை ஓடிச் சென்று எடுத்து வந்து அமரும் இருக்கைக்கு பக்கத்தில் போட்டாள். சின்ன தூறலோ சற்று பெரிதாக எடுக்க, “என்ன? இன்னும் இந்த ராமுவை காணாம். காலைல போனவன் இன்னும் வரல. அவர் போனப்பின் எல்லாம் வெறுமையே. உறவுகள் அனைவரும் எங்க நம்ம மேல பாரம் ஏறப்போவுதுன்னு இதோ  நாளை வரேன் இன்று மாலை வரேன்  சொல்லிட்டு போனவங்க தான் இந்த மூன்று வருடம் இந்த பக்கமே தலை வைத்து படுக்கல. போற வழி வரும் வழியில் எங்காவது பார்த்தாலும் பார்த்தும் பார்காததுப் போல் செல்வதோ. வெந்த புண்ணில் மேலும் எண்ணெயை ஊற்றுவதுப் போல் உள்ளதே. அவர்கள் முன் வாழ்ந்து காட்டுவோம் என்று நினைத்தால் எங்க உடம்பு முடிய மாட்டுதே. மீறி வேலை செய்து வந்தாலும் ராமுவின் வாலுத்தனமும் சேட்டையால் ஏற்படும் விரையமும் மேலும் பாடாய் படுத்துதே. கீற்றில் இருந்து ஒழுகும் மழைத்துளியை வாலியில் நிரப்ப வாசல் ஓலையை நீக்கி விட்டு தொப்பரையா மழையில் நனைந்து விட்டு திரு திரு முழிப்புடன் ராமு வந்து நிற்க!

சிறுகதைப் போட்டி – 23 : உணர்வுகள் தொடர்கதை – புதுவை பிரபா

பாதியிலே நிறுத்திவிட்டு, வெடுக்கென்று எழுந்தாள். இப்போதெல்லாம், தொலைக்காட்சி நாடகங்கள் கூட எதிரிகளாகி இருந்தன, அன்பரசிக்கு. துணைக்கு இருந்த தாயாரும், போன வாரம் புறப்பட்டு போனதிலிருந்து, ராட்டினம் போல், மேலும் கீழுமாக அவளது உள்ள உணர்வுகள் சுழலத் தொடங்கியிருந்தது. எதிலும் நிலைகொள்ளாமல் தவியாய் தவித்தாள்.

செல்பேசியை கையில் எடுத்தாள். அவள் விரல் நுனி பட்டு, தொடுதிரை ஒளிர்ந்தது. அதில், மணிமாறன் கைகளைக் கட்டிக்கொண்டு  புன்னகைத்தபடி இருந்தான்.  அன்பரசி, கழுத்தை, சற்று லேசாக  திருப்பி,  உற்றுப்பார்த்தாள். அவள் விரல்களால் அந்த பிம்பத்தை தடவத்தடவ, அது நாலாபுறமும் மிதந்துமிதந்து, நடுநிலையடைந்தது.   அன்பரசி பெருமூச்சி விட்டாள்.

மேலும் படிக்க…

சிறுகதைப் போட்டி – 22 : அருளும் அன்பும் – சி.மணி

அதிகாலை நேரம் வீட்டின் தின்ணையில் செய்தித்தாளை வாசித்துக்கொன்டிருந்தார்  சோலைமலை. அவர் அருகில் அமர்ந்து புத்தகத்தை புரட்டிக்கொன்டிருந்தான் செழியன்.

“என்ன செழிய ஆர்வமா ஏதோ புத்தகத்தை புரட்டி குறிப்பெடுக்கிறமாதிரி தெறியுது” என்று சோலைமலை கேட்க,

“ஆமா தாத்தா எங்க பள்ளிக்கூடத்தில நாளைக்கி ஆண்டுவிழா நான் கட்டுரை போட்டியிலயும், பேச்சு போட்டியிலயும் கலந்துக்கிறேன். அதுக்காக நூலகத்தில எடுத்துகிட்டு வந்த புத்தகத்தில இருந்து குறிப்பெடுத்துகிட்டுருக்கேன் தாத்தா. ‘புறநானூற்றில் தமிழரின் கருனையும் வீரமும்’ என்ற தலைப்பில்  நான் பேச்சு போட்டியில பேசப்போறேன் தாத்தா” என்றான் செழியன்.

மேலும் படிக்க…