‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 – பதிவுகள்

வணக்கம்.

‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ சிறுகதைப் போட்டி – 2018ல் பங்கேற்றோரின் பதிவுகள் இந்த இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. போட்டியில் இடம் பெற்ற கதைகளின் இணைப்புகள், தளத்தில் பதியப்பட்ட வரிசையில் தொகுக்கப்பட்டுள்ளன.

 1. பெண்ணின் நீதி – கோவி. சேகர்
 2. சேர்வேன் அவனிடம் – ராஜேஷ்
 3. யாரினும் இனியன் – பத்மா
 4. அற்றைத் திங்கள் – பத்மா
 5. கள்வன் மகன் – கா. விசயநரசிம்மன்
 6. ஒக்கல் வாழ்க்கை – கா. விசயநரசிம்மன்
 7. வருவான் காதல் தேவன் – அபிராமி பாஸ்கரன்
 8. வடிகால் – ப்ரீத்தி பட்டாபிராமன்
 9. அறம் இதுதானோ? – அருண்குமார்
 10. சிறைப் பறவை – அருண்குமார்
 11. வடக்கிருந்தவர் – சோ.சுப்புராஜ்
 12. நட்பு – ப்ரீத்தி பட்டாபிராமன்
 13. விண்ணைத் தொடு – பத்மா
 14. களம்புகல் ஓம்புமின் – கா. விசயநரசிம்மன்
 15. கேட்டதும் காதல் – வி. கங்கா மோகன்
 16. கெடுநரும் உளரோ? – கா. விசயநரசிம்மன்
 17. பிசிராந்தையாரும் பேனா நட்பும் –  சில்வியாமேரி
 18. உயிர்ப்பசி உணர்ந்தவர்கள் –  சில்வியாமேரி
 19. செக்டார் 2403 [செல்வத்துப் பயனே ஈதல்] – ஜ.சிவகுரு
 20. வண்ண வண்ணக் குடைகள் – அகில்
 21. பசலைக்கோர் பச்சிலை – இன்னம்பூரான்
 22. அருளும் அன்பும் – சி.மணி
 23. உணர்வுகள் தொடர்கதை – புதுவை பிரபா
 24. தோள் மேல் சின்ன பனித்துளி – ஸ்டெல்லா மேரி எம். ஜே.
 25. அழகு எனப்படுவது யாதெனில் – தேவி பிரபா
 26. முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் – மாலா ரமேஷ்
 27. பயந்து ஓடிய பயம் – மாலா உத்தண்டராமன்
 28. வாலிழை மகளிர் – மா.மணிகண்டன்
 29. தேசத்தைக்காத்தல் செய் – மீரா ஜானகிராமன்
 30. பிரிவு – பானுரேகா பாஸ்கர்
 31. காதல் – பானுரேகா பாஸ்கர்
 32. மறப்புகழ் நிறைந்தோன்! – மதிஸ்குமார்
 33. இதெல்லாம் வீண் செலவு! – மாலா உத்தண்டராமன்
 34. வள்ளல் – பத்மா
 35. விடியல் – மாலா உத்தண்டராமன்
 36. பழையன கழிதலும் புதியன புகுதலும் – உ .தேவி பிரபா
 37. சிறந்த பாடல் எது..? – வெ.கண்ணன்
 38. வரி எதிர்த்த வரிகள்! – ப்ரணா
 39. வதுமை நன்மணம் – மா.மணிகண்டன்
 40. காதல் நதியினிலே!!!

நன்றி.

சிறுகதைப் போட்டி – 40 : காதல் நதியினிலே!!! [பகுதி 4] – பௌசியா

<< காதல் நதியினிலே!!! – பகுதி 3

7

மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப்
புலம் பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும்,
முட்டாச் சிறப்பின் பட்டினம்

காவிரி நதி கடலில் புகும் இடமாதலால் புகார் எனவும், காவிரி நதி கடலில் சங்கமிக்கும் பட்டினத்து நகர் என்பதனால் காவிரிப்பூம்பட்டினம் எனவும் அழைக்கப்பட்ட சோழநாட்டின் துறைமுக நகரம் இரவு, பகல் என்ற வேறுபாடின்றி என்றும் மக்கள் கூட்டமும், பன்னாட்டு வணிகங்கள் நடைபெறுவதனால் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வண்டிகளின் சத்தமும், கொண்டு செல்லும் சரக்குகளை கப்பலில் ஏற்றவும், இறக்குமதியாகும் பொருட்களை பண்டகசாலைக்கு ஏற்றி இறக்க அமர்த்தப்பட்ட அடிமைகளின் நடமாட்டமும் என புகார் தூங்க நகரமாகவே இருந்துவந்தது. இங்குள்ள ஆடவரும், பெண்டிரும் நினைத்த நேரத்தில் வீதிகளில் நடமாட போதிய காவலை ஏற்படுத்தியிருந்தார் பேரரசர் கரிகால் பெருவளத்தான். அவரின் ஆட்சியின்கீழ் மக்கள் எத்தகைய சிரமமும் இன்றி வாழ்ந்துவந்தனர்.

மேலும் படிக்க…

சிறுகதைப் போட்டி – 40 : காதல் நதியினிலே!!! [பகுதி 3] – பௌசியா

<< காதல் நதியினிலே!!! – பகுதி 2

காதல் நதியினிலே!!! – பகுதி 4>>

5

‘ஒலி கதிர்க் கழனி, கழாஅர் முன்துறை
கலி கொள் சிற்றமொடு கரிகால் காண
புனல் நயந்து ஆடும் அத்தி’

‘சோழநாடு சோறுடைத்து’. ஆம் பசித்த பிள்ளைக்கு தன் உதிரத்தை பாலாக ஊட்டும் அன்னையை போன்ற காவிரியாற்றின் அருளால் எங்கும் பசுமையான வயல்வெளிகளையும், முப்போகமும் வளமாய் விளையும் கழனிகளையும் கொண்டிருந்தது சோழ நாடு. நாட்டின் செழிப்பு நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தோடு இணைந்த ஒன்று. அவ்வகையில் சோழ நாட்டு குடியானவன் கூட செல்வந்தனாய் வாழ்ந்திருந்தான் என்றால், அதற்கு அன்னை காவிரியின் கருணையே காரணம். காவிரி அன்னையின் கருணைக்கு கைம்மாறாக சோழ நாட்டு மக்கள் காவிரியின் கரையோரத்தில் அன்னைக்கு பொங்கலிட்டு, தீபம் ஏற்றி வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

மேலும் படிக்க…

சிறுகதைப் போட்டி – 40 : காதல் நதியினிலே!!! [பகுதி 2] – பௌசியா

<< காதல் நதியினிலே!!! – பகுதி 1

காதல் நதியினிலே!!! – பகுதி 3>>

3

“மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டும் காணேன் மாண்தக் கோனை”

குடகின் குலமகள் கன்னிக்காவிரி தன் நாயகனை தழுவி இன்பம் காணும் துறையை தன்னகத்தே கொண்ட கழாரின் பொழுது வழக்கத்திற்கு மாறாக இன்று வெகுவேகமாக புலர்ந்து கொண்டிருந்தது. கலம் செலுத்தி வணிகம் செய்யும் புகார் நகரத்திற்கு ஐந்துகல் தொலைவில் உள்ள கழார், இன்று புகார் நகரைவிட சுறுசுறுப்பாக காணப்பட்டது. மாளிகைகள், வீடுகள் அனைத்தும் புதுசுண்ணம்  வர்ணம் பூசி, வாயில்களில் தோரணம் கட்டப்பட்டு, வாயில்களில் வண்ணக்கோலங்கள் இடப்பட்டு கழார் நகரமே இந்திரலோகம் போலக் காட்சி தந்தது. கழாரின் அக்கம் பக்கத்து ஊர்களை சேர்ந்தவர்கள் நான்கு நாட்கள் முன்னரே, கழாரில் உள்ள தங்கள் உறவினர் வீடுகளுக்கு வரத் துவங்கிவிட்டிருந்தனர்.

மேலும் படிக்க…

சிறுகதைப் போட்டி – 40 : காதல் நதியினிலே!!! [பகுதி 1] – பௌசியா

1. “தலைநாள் மாமலர் தண்துறைத் தயங்கக் கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று”

குடகின் குலமகள் காவிரிப்பெண் ஓடோடி வருகிறாள். அவளின் வருகை கண்ணுக்கெட்டா கரைகொண்ட கடலையே அதிர செய்கிறது. காவிரி தன் பரப்பை விரித்து, தான் வரும் பாதையில் செழிப்பை விதைத்து ஓடோடி வந்துகொண்டு இருக்கிறாள். இவளின் வேகத்திற்கு ஈடுதர இயலாது ஆங்காங்கே கரை ஒதுங்குகின்றன காவிரியில் குளிக்க குதித்த இலை, தழைகளும், மரத்துண்டுகளும். ஆனாலும் அவளின் வேகம் சற்றும் குறையவில்லை, தான் கொண்ட காதலை, முழுவேகத்துடன் தன் காதலனிடம் சொல்லிவிடும் நோக்குடன், நாணமற்ற பேதை போல், அப்பப்பா ஆனாலும் இந்த காவிரிக்கு இத்தனை வேகம் ஆகாது.

மேலும் படிக்க…