சிறுகதைப் போட்டி – 11 : வடக்கிருந்தவர் – சோ.சுப்புராஜ் [1]

காளிமுத்து மாமா மனப்பிறழ்வு நோய்க்கு ஆட்பட்டு அதற்கான மருத்துவம் எதையும் ஏற்றுக் கொள்வதற்குப் பிடிவாதமாக மறுத்து செத்துப் போனார். எலக்ட்ரிக் சுடுகாட்டில் எரிந்து பிடி சாம்பலாகி, அதற்கான 16ம் நாள் காரியங்களும் முடிந்து சொந்த பந்தங்கள் அணைவரும் அவரவர்களின் தினப்படி அவசரங்களைத் துரத்திக் கொண்டு கலைந்து போய் விட்டார்கள்.

இந்துமதியும் டெல்லிக்குத் திரும்பிப் போகவேண்டும். ஆனால் அக்காள் பாண்டிச் செல்வியை என்ன செய்வதென்று தான் அவளுக்குப் புரியவில்லை. எப்போதும் அவள் ”அவரு மனசுக்குள்ள என்னவோ ஒரு பெரிய குறையோ, வெளியில சொல்ல முடியாத வலியோ இருந்துருக்கு; கடைசி வரைக்கும் நம்மளால அது என்னன்னு கண்டுபிடிக்கவே முடியலயேடீ! அவர நான் இன்னும் கொஞ்சம் கவனமா பார்த்துருக்கலாமோ…” என்று திரும்பத் திரும்பப் புலம்பிக் கொண்டிருந்தாள்.

சிறுகதைப் போட்டி – 10 : சிறைப் பறவை – அருண்குமார்

மாநகரங்களின் வளர்ச்சி மாநிலத்தின் வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த வளர்ச்சியின் பின்னால் எத்தனை எத்தனை மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தெருவில் விடப்பட்டனர் என்பது பெரும்பாலும் பலரால் கவனிக்கப் படுவதில்லை. கவனிக்கப்படும் அளவிற்கு அவர்கள் அரசாங்கத்திற்கு முக்கியமானவர்களாகவும் இருப்பதில்லை.
கொல்கத்தா, பம்பாய், டெல்லி, பெங்களூர், ஐதராபாத், சென்னை என இந்தியாவின் மாநகரங்கள் எதை எடுத்து கொண்டாலும் வானுயர்ந்த கோபுரம் போன்ற கட்டிடங்கள் மட்டும் அதன் அடையாளமாக இருப்பதில்லை‌. அதன் விளைவாக தெருவில் அனாதைகளாக விடப்பட்ட பல மக்களும் அதன் அடையாளம் தான்.

சிறுகதைப் போட்டி – 9 : அறம் இதுதானோ? – அருண்குமார்

சோழநாடு வளமான நாடு. அந்த வளமை இயற்கையின் செழுமையால் கிடைத்தது மட்டுமின்றி எதிரிகளின் அழுகையால் அடித்து பெறப்பட்ட செல்வங்களும் அடங்கும்.

அந்த அரசன் பெயர் புலிவேந்தன். புலிக் கொடி பொறித்த நாட்டை ஆள்பவன். அவன் அப்பா ராஜாவாக இருந்த போது மூவேந்தர்களில் மற்ற இருவரை அடக்கி ஒடுக்கி அவர்களின் இடம் பெரும்பாலானவற்றை பிடித்து விட்டார். இவன் ஆட்சிக்கு வந்த போது மற்ற இரு அரசர்கள் குறுநில மன்னர்களின் நிலைக்கு வந்திருந்தனர். செங்கொடி வழுவாமல் ஆட்சி செய்யும் என்று சொல்லப்பட்ட பரம்பரையில் வந்த இவன் போரின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவன். மற்ற அரசர்கள் வேட்டைக்கு செல்வது போல இவன் போருக்கு சென்று கொண்டிருந்தான்.

மேலும் படிக்க…

சிறுகதைப் போட்டி – 8 : வடிகால் – ப்ரீத்தி பட்டாபிராமன்

மணிமேகலை கடிகாரத்தைப் பார்த்தாள். இன்னும் முப்பது நிமிடங்களில் கல்லூரி முடிந்துவிடும். நாளை எடுக்க வேண்டிய செய்யுட்களைப் பார்த்துக்கொண்டும், குறிப்புகள் எடுத்துக்கொண்டுமிருந்தாள். அகநானூறில் மூழ்கிப்போனாள். கல்லூரி முடிந்ததைக்குறிக்கும் மணி அடித்தும் படித்துக் கொண்டிருந்தாள். திடீரென்று தன் மகனின் எண்ணம் வந்து கிளம்பினாள். கனவுபோல இருக்கிறது.

அவள் தந்தை மாணிக்கவாசகம் தமிழைத்தவமாகக்கருதியவர். ஆனால், அவர் செய்த அலுவலகப்பணி அதற்கு நேரம் தரவில்லை. அவரின் ஒரே மகள் மணிமேகலை. அவள் பிறந்த உடனே, முடிவு செய்துவிட்டார், அவளை தமிழாசிரியை ஆக்கவேண்டும் என்று.

மேலும் படிக்க…

சிறுகதைப் போட்டி – 7 : வருவான் காதல் தேவன் – அபிராமி பாஸ்கரன்

சோறுடைக்கும் சோழவள நாட்டில் திருவையாற்றுக்கு அருகே காவிரியின் தென்கரையில் அமைந்த திருவேதிக்குடி அன்று மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. புற்கள் மீது படர்ந்திருந்த பனித்துளி நல்லாளை, தன்னுள் அடக்கிவிடும் நோக்குடன் கீழ் திசை வானில் கதிரவன் மெல்ல உதித்துக் கொண்டிருந்தான். அதிகாலையின் அந்த அழகிய வேளையில் திருவேதிக்குடியில் சலசலப்பு மிகுந்திருந்தது. மக்கள் ஆங்காங்கே கூடி நின்று பேசும் வண்ணமிருந்தனர். பெண்கள் அதிகாலையில் செய்ய வேண்டிய தங்கள் அன்றாட வேலைகளையும் மறந்து சிறு சிறு கும்பலாக பிரிந்து நின்று பரபரப்புடன் பேசிக்கொண்டிருந்தனர். ஆண்கள் ஆங்காங்கே நின்று பேசுவதும், விரைந்து செல்வதுமாக இருந்தனர். அந்த ஊரில் மட்டுமல்லாது சோழ தேசம் முழுவதுமே அன்று அதிகாலை இந்த காட்சிகளை காணும்படி இருந்தது. அதற்கு காரணம், முதல் நாள் இரவுக்கிரவே, சோழ நாட்டின் அரசர் ஆதித்த சோழரின் வீரர்களால், சோழ நாட்டில் பரவியிருந்த ஓர் செய்தி தான்.

மேலும் படிக்க…