கரிகாலரின் இமயப் படையெடுப்பும், அவரது இமயப் படையெடுப்புக் காலமும் : ஓர் ஆய்வுக் கட்டுரை

கரிகாலர் :

கரிகாலரைப் பற்றியும் அவர் வாழ்ந்த காலத்தைப் பற்றியும் நாம் அறிவதற்கு மயிலை சீனி. வேங்கடசாமி, கா. அப்பாத்துரையார், நீலகண்ட சாஸ்திரி, புலவர் கா. கோவிந்தனார் ஆகிய தமிழ் வரலாற்று ஆய்வாளர்களின் நூல்களைப் படித்தால் ஒவ்வொருவருடமிருந்தும் ஒவ்வொரு விதமான முரண்பட்ட ஆய்வுத் தகவல்களே கிடைக்கின்றன. சிலர் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் கரிகாலன் வேறு, பட்டினப்பாலையில் குறிப்பிடும் திருமாவளன் வேறு, பொருநராற்றுப் படையில் குறிப்பிடப்படும் வளவன் வேறு என்று ஆதரங்களை அடுக்கி கரிகாலன் – 1, கரிகாலன் – 2 என வகைப்படுத்துகின்றனர். அவர்கள் வெண்ணிப் போரில் வெற்றி பெற்ற கரிகாலன் வேறு; காவேரிக்கு அணை கட்டிய திருமாவவளன் என்பவன் வேறு; இமயத்திற்கு படையெடுத்த கரிகாலன் என்பவன் வேறு என்று கூறுகிறார்கள். சிலர் அதே ஆதாரங்களை மறுத்து கரிகாலன் என்பது ஒருவர் தான் என்றும் மறுக்கிறார்கள்.

மேலும் படிக்க…

காலக்கணக்கில் குழம்பிய காலதேவன்

பேருந்தில் அமர்ந்திருந்தேன்…

நடக்க முடியாத கிழவர் ஒருவர்
‘தர்மம் செய்யுங்க சாமீ’
என்று காலில் விழுந்தார்.

பத்துரூபாயை எடுத்துக் கொடுத்தேன்.

‘உங்க தலைமுறையே நல்லா இருக்கும்’
என்று வாழ்த்திவிட்டுச் சென்றார்.

அவர் கடந்து சென்றதும்
வயிறு வீங்கிய பெண் ஒருத்தி வந்தாள்.
ஐந்து ரூபாயை எடுத்துக் கொடுத்தேன்.

‘உங்க குழந்தை நல்லா இருக்கும்’
என்றபடி கடந்து சென்றாள்.

நெற்றி நிறைய அப்பிய மஞ்சள், குங்குமம்
நாக்கில் குத்தியிருந்த நீண்ட அலகு
கழுத்தில் தொங்கிய ருத்ராட்ச மாலை…
பாதி கூட நிரம்பியிராத உண்டியலை
முகத்திற்கு முன்பு நீண்ட நேரம் குலுக்கிக் கொண்டிருந்தாள் அம்மன்.
பைக்குகள் கையை விட்டு
கடைசி இரண்டு ஒரு ரூபாய் நாணயங்களை
உண்டியலுக்குள் போட்டேன்.
‘இரண்டு ரூபாய் தானா???’ என அம்மன்
‘ஏளனப் பார்வை’யுடன் கடந்து சென்றாள்…

மார் பெருத்த மங்கை இடுப்பில் குழந்தையுடனும்,
வீங்கிய கால்களைத் துணியால் சுற்றி
தேய்த்துக் கொண்டே வந்த இளைஞன்,
முடி நிறைந்திருந்த மார்புடன்  கீழ் வயிறு தெரிய
அரைகுறையாக சேலை உடுத்திய திருநங்கைகள்,
‘அண்ணா… அண்ணா…’ என்று பேருந்து நகரும் வரை
நம்பிக்கையுடன் காத்திருந்த சிறுவன் என
யாரையும் நான் திரும்பிக் கூட பார்த்திருக்கவில்லை.

கையில் படிப்பதைப் போன்று பாசாங்கிற்கு வைத்திருந்த
புத்தகத்திற்குள் எப்போதோ தொலைந்து போயிருந்தேன் நான்.

முன்னவர்கள் என்னை வாழ்த்திவிட்டுச் சென்றார்கள்.
பின்னவர்கள் தூற்றிவிட்டுச் சென்றார்கள்…

இப்போது கால தேவனும்
நிச்சயம் தடுமாறிக் கொண்டிருப்பான்
என்னைப் போன்றே …

என் ஏட்டுக் கணக்கில்
தர்மத்தைக் கூட்டுவதா அல்லது
கழிப்பதா என்று!!!

சி.வெற்றிவேல்,
சாளையக்குறிச்சி…

உனக்கும் சேர்த்து நான் ஒருவன் காதல் செய்வேன்…

என் தேடல்

உனக்காகத்தான்…

என் பயணம்

உனக்காகத்தான்…

என் இலக்கும்

உனக்காகத்தான்…

 

யுகம் யுகங்களாக இறந்து

மீண்டும் மீண்டும் பிறந்துகொண்டிருக்கிறேன்

உனக்காக…

 

இருவரும் சந்திக்கும்போது

காதல் மொழி வேண்டாம்…

விழிகள் இணைந்து

நேரத்தைக் கடக்க வேண்டாம்..

உதட்டோரம் சிறு சிரிப்பு,

கடைக்கண் பார்வை என

எதுவும் தேவையில்லை…

 

பெருஞ்சிந்தனையில் பேனாவைக் கடிக்கும்

சமயத்திலோ…

உறக்கம் வராமல் புரண்டு படுக்கும்

பொழுதிலோ – அல்லது

தனிமையை விரும்பி

அமர்ந்திருக்கும் காலத்திலோ

என் நினைப்பு உன்னுள் தோன்றி

மறைந்தால் போதும்…

 

உனக்கும் சேர்த்து

நான் ஒருவன் காதல் செய்வேன்…

 

சி.வெற்றிவேல்…

சாளையக்குறிச்சி

மோகப் புயல்

என் உள்ளக்கிடங்கினுள்
மறைத்து வைத்திருக்கும் காதலெல்லாம்
மோகத்தீயாய் என்னுள்
சுடர்விடத் தொடங்கிவிட்டது…

காதல் மழையில் நனைந்துகொண்டிருந்த என்னை
உணர்சிகளால் ஆன
நரம்புகளுக்கிடையில் புறப்பட்ட
மோகப் புயல் சூழ்ந்து
சூறையாடுவதேனடி…

ஒளியினைப் பற்றிக்கொண்ட
நிலவினைப் போல
என் உயிரும் உனைப்பற்றிக்கொள்ள
துடித்துக்கொண்டிருக்கிறது…

என் மோகத்தீயை
நீயும் உணர்ந்தால்,
என்னை அணைத்துக்கொள்…

தோட்டாவைப்போல் உன் பார்வை
என்னைத் துளைக்கட்டும்…
வாளினைப் போல என்னைக்
கிழித்தெறியட்டும்…
இதழ்களால் எனை
இதமாகத் தீண்டு…
முத்தத்தினால் எனை
மூழ்கடிக்கச் செய்…
உடல் சிவந்து கண்ணும் அளவிற்கு கடி…
தீண்டலினால் எனை
கொழுந்துவிட்டெரியச் செய்…

உன்னைத் தீண்ட
உன்னை நேசிக்க
உன்னை அணைக்க
உனக்காகவே நான் பிறந்திருப்பதைப் போல
எனக்காகவே நீயும் பிறந்திருக்கிறாய் எனில்
உன்னிடம் இருப்பவையனைத்தையும்
பாரபட்சமின்றி
எனக்காகக் கொடுத்துவிடு…

அஸ்தமனத் தொடுவானில்
மறைந்துபோகும் வெளிச்சத்தைப் போல
நானும் கரைந்துவிடுகிறேன்
உன் மார்புகளுக்கிடையில்…

சி.வெற்றிவேல்.
சாளையக்குறிச்சி..