காட்டு அழகர் கோயில் பயணம்

கோயிலுக்குள் நுழைவதற்குமுன் காட்டு அழகரின் காவல் தெய்வமான கருப்பசாமியை தரிசிக்கலாம். காட்டு அழகரை தரிசிக்க வரும் அன்பர்கள் முதலில் நூபுர கங்கையில் நீராடிவிட்டு, அடுத்து இந்தக் கருப்பசாமியை வழிபட்டுவிட்டே கோயிலுக்குள் செல்லவேண்டும் என்பது மரபு.

அதன்படி, கருப்பரை வணங்கி உள்ளே நுழைந்து கருடாழ்வாரை தரிசித்தபின் அர்த்தமண்டபத்தில் நுழைந்தால், விசுவாமித்திரர், பழைய ஆதிகால பெருமாள், ஆஞ்சநேயர், மண்டூக மகரிஷி, ராமாநுஜர், விஸ்வக்சேனர் ஆகியோரை தரிசிக்கலாம்.

கருவறையில் நின்ற கோலத்தில் சேவை சாதிக் கிறார் பெருமாள். பெயருக்கேற்ப மிக்க எழிலுடன் திகழ்கிறார் பெருமாள். தாயார்களையும் பெருமாளையும் பிரார்த்தித்து வெளியேறி வலமாக வந்தால், கோயிலின் பின்புறத்தில் அந்த இயற்கை அதிசயத்தைக் காணலாம்.

கோயிலுக்கு வலப்புறத்தில் மிகப்பெரிய பள்ளத்தாக்கு ஒன்று காணப்படுகிறது. விழிகளுக்கு எட்டிய தொலைவு வரை பசுமையைப் போர்த்தியபடி காட்சியளிக்கிறது அந்தப் பள்ளத் தாக்கு. அதன் எல்லையாகத் திகழும் மலை முகடு களைக் கவனிக்கும் தருணத்தில் மெய்ம்மறந்து போகிறோம். சாட்சாத் பெருமாளே சயனித்திருப் பது போன்ற திருக்காட்சியைக் காட்டுகின்றன அந்த முகடுகள். அகன்ற நெற்றி, நீண்ட மூக்கு, கழுத்து… என மிகத் துல்லியமான திருமுக தரிசனம் நம்மைச் சிலிர்க்கவைக்கிறது.

குறிப்பிட்ட ஒரு முகட்டினை பெருமாளின் முகம் என்றும், அதன் பின்னாலிருக்கும் மலையை எம்பெருமானுக்குக் குடைபிடிக்கும் ஆதிசேஷன் என்றும், சற்று தாழ்வாகக் காணப்படும் மலை முகடுகளை  ஸ்ரீதேவி, பூதேவி பிராட்டிமார்கள் என்றும் கருதி, இங்கிருந்தபடியே வணங்கி வழிபடுகிறார்கள் பக்தர்கள். இயற்கையே இறை; இறையே இயற்கை என்பதை உணர்ந்து சிலிர்த்த தருணம் அது!

இந்தத் தரிசனத்தையொட்டியே இந்தத் தலம் `தர்மாத்ரி பர்வதம் – வராக க்ஷேத்திரம்’ எனச் சிறப்பிக்கப்படுகிறதாம்.

ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சுற்றியுள்ள 200 கிராமங் களுக்கு, இந்தக் காட்டு அழகரே குலதெய்வமாம். இந்த அழகரைத் தரிசித்து வழிபட்டுச் சென்றால், குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் குழந்தை வரம் கிடைக்கும், தீராத தோஷங்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை. அதேபோல், நூபுர கங்கையில் நீராடினால் தீராத வியாதிகளும்  தீர்ந்துவிடும் என்று நம்பிக்கை பொங்கச் சொல் கிறார்கள் பக்தர்கள்.

நீங்களும் ஒருமுறை செண்பகத் தோப்பு தலத் துக்குச் சென்று காட்டு அழகரையும் அவர் மலையாய் சயனித்திருக்கும் அற்புதத்தையும் தரிசித்து வாருங்கள்; உங்கள் கவலைகளையெல்லாம் நீக்கி நல்வாழ்வுக்கு வழிகாட்டுவார், அந்தக் காட்டு அழகர்!

பக்தர்கள் கவனத்துக்கு…

தலம்: தர்மாத்ரி பர்வதம் வராக க்ஷேத்திரம்

பெருமாள் : ஸ்ரீகாட்டு அழகர் (ஸ்ரீசுத்தரராஜ பெருமாள்)

தாயார் பெயர் : ஸ்ரீதேவி, பூமி தேவி

தீர்த்தம்: நூபுர கங்கை

கோயில் திறந்திருக்கும் நாள்கள்: சனி, ஞாயிறு மட்டுமே

நேரம் : காலை 9:30 முதல் மாலை 4:00 மணி வரை.

எப்படிச் செல்வது?: ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து செண்பகத்தோப்புக்குக் காலை 6 மணி மற்றும் இரவு 6 மணிக்கு என ஒரு நாளில் இரண்டு முறை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படு கின்றன. மற்ற நேரங்களில் ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து ஆட்டோ பிடித்துதான்  செண்பகத்தோப்புக்குச் செல்லவேண்டும்.

அடிவாரப் பகுதியிலிருந்து சுமார் 7 கி.மீ தூரம் மேலே ஏறினால்  நூபுர கங்கையை அடையலாம். அங்கிருந்து படிகள் ஏறிச் சென்று கோயிலை அடையவேண்டும்.

மலையேற்றம் கடினமாக இருப்பதால் நடக்க முடியாதவர்கள், வயதானவர்கள் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. யானைகள் உலாவும் பகுதி இது. ஆதலால், இப்பகுதியில் தனியாகப் பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும். கூட்டத்துடன் சேர்ந்து பயணிப்பதே சிறந்தது.

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here