தமிழகத்தின் குருஷேத்திரம் #Manimangalam

சிவன் கோயில்களிலே முதன்மைக் கடவுளாக விளங்கும் விநாயகர், இத்தலத்திலும் முதன்மைக் கடவுளாக கோஷ்டத்தில் அருள்புரிகிறார். மேலும் கோஷ்டங்களில் யோக நரசிம்மர், பரமபதநாதர், ஆதிசேஷன் குடை கீழ் நாராயணர், விஷ்ணு துர்கை ஆகியோர் காட்சியளிக்கிறார்கள். இத்தல யோக நரசிம்மரை வேண்டிக்கொண்டால் அனைத்து யோகங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் கோபாலசுவாமி, பரமபதநாதர் மற்றும் இதே ஊரில் அருள் புரியும் வைகுண்ட பெருமாள் ஆகியோரைத் தரிசித்தால் 108 திவ்ய தேசங்களையும் தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். பக்தர்களுக்குச் சரணாகதி அளித்து துயர் துடைப்பதில் கண்கண்ட தெய்வம் ராஜகோபால சுவாமிகள். அவரது பாதங்களைச் சரணடைவோமாக…

உங்கள் கவனத்துக்கு…

திருத்தலம்: மணிமங்கலம்

இறைவன்: ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீராஜகோபால சுவாமி

தாயார்: ஸ்ரீசெங்கமலவல்லித் தாயார், ஸ்ரீஆண்டாள்

திருவிழாக்கள்: புரட்டாசி சனிக்கிழமை, கிருஷ்ண ஜயந்தி, நவராத்திரி ஆகிய விழாக்கள் விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றன.

நடை திறந்திருக்கும் நேரம்: தினமும், காலை 6.30 முதல் 10.30 மணி வரை; மாலை 3 மணி முதல் இரவு 6 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

எப்படிச் செல்வது?: சென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் 30 கி.மீ தொலைவிலும், தாம்பரத்திலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவிலும்  மணிமங்கலம் இருக்கிறது. தாம்பரத்திலிருந்து பேருந்து வசதி உண்டு.

#Chalukiya #Pallava #War #Manimanglaam #Krishnatemple

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

சி.வெற்றிவேல், சலைக்குறிச்சி…

writervetrivel.com

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here