வானவல்லி – வாசகர் கடிதம் 4

தன் சரித்திரப் படைப்புகளில் அழுத்தமான கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் முழு வெற்றியும் கண்டவர்கள் கல்கி மற்றும் சாண்டில்யன் போன்ற வெகு சிலரே. அதே வரிசையில் வானவல்லி என்ற சரித்திரப் புதினத்தை எழுதி அதில் முழு வெற்றியும் கண்டிருக்கிறார் பெயரிலேயே வெற்றியைக் கொண்ட அன்பு மகன் சாளையக்குறிச்சி திரு.வெற்றிவேல்.

அவரது வானவல்லி அதியற்புதமான அருமையான நாவல். சாண்டில்யனின் யவன ராணியின் கதையைப் போல கரிகால வளவனின் சரித்திரத்தைப் மிக அழகாக எழுதியிருக்கிறார். அவரது கதை சொல்லும் நடை, போர் முறைகள், விளக்கங்கள், எழுத்து நடை, போருக்கு அவர் வரைந்து கொடுத்திருக்கும் வரைபடங்கள் மற்றும் போர் வியூகங்கள் என அனைத்தும் சிறப்பு.

மேலும் படிக்க…

வானவல்லி வாசகர் கடிதம் : 3

வானவல்லி ஆசிரியர் வெற்றிவேல் அவர்களுக்கு,

தாங்கள் எழுதிய வானவல்லி புதினத்தை முழுவதுமாக படித்துவிட்ட பிறகே எனது கருத்தை கூற வேண்டும் என்று எண்ணியிருந்தேன். தற்பொழுது படித்தும் முடித்துவிட்டேன். நான் பல்வேறு ஆசிரியர்களின் பல்வேறு புதினங்களை வாசித்திருக்கிறேன், அவற்றில் வானவல்லி புதினத்திற்கு நிகர் எதுவுமே இல்லை என்று தங்களது புதினம் நினைக்க வைத்துவிட்டது. இனியும் இருக்குமா என்பதும் சந்தேகமே. இக்கதையைப் படிக்கும்போது கதை நடந்த காலத்தில் வாழ்ந்த அனுபவம் கிடைத்தது. பல்வேறு இலக்கியங்களை ஆதாரமாக மேற்கோள் காட்டியிருப்பது மிகவும் சிறப்பு. கதை மாந்தர்களின் தேர்வு நன்று. சங்க காலத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் போர் மற்றும் அரசியலில் பங்கு பெற்றதை எழுதியிருப்பது மிகவும் சிறப்பு. பழங்கால தமிழக வரைபடத்தை  ஆங்காங்கே கொடுத்திருப்பதால் கதை நடந்த இடத்தை தெளிவாக அறிய முடிகிறது. கள்வன் காளன் வீர மரணம் மற்றும் சில அத்தியாயங்களில் மட்டுமே வந்திருந்தாலும் நடன மங்கை பூங்கோதையின் பெருந்தினைக் காதல் மற்றும் அவளது மறைவு நெஞ்சத்தை நெகிழச் செய்தது. பட்டி, சேனாமுகம், குல்மா, கணம், வாகினி, பிரிதனா, சம்மு, அணிகினி, அக்குரோணி போன்ற அக்கால படைப் பிரிவுகளை பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.
மேலும் படிக்க…

வானவல்லி வாசகர் கடிதம் : 2

என்னவொரு வித்தியாசமான பயணம். புறவுலகைத் துறந்து கலைநயமான ஈராயிரம் ஆண்டுத் தொலைவை எட்டச் செய்து துள்ளிக் குதித்தது மனம். புகார்த் துறைமுகம், உறைந்தை எனச் சோழர்களின் ஊர்களையும், வஞ்சிமாநகரம், மதுரை எனச் சேர பாண்டியர்களின் ஊர்களும், டாள்தொப்பியாஸ், ஆண்டிரிமெடா, ஹிப்பலாஸ், இம்போடெக் என யவனர்களின் தமிழக ஈடுபாடுகளையும், சேர, பாண்டிய, கலிங்க, அவந்தி, சுங்க அரசுகளின் அரசியல் நிலைகளையும் கண்டு அது அந்தக் காலத்திலேயே இன்னும் ஸ்தம்பித்து நிற்கிறது. இன்னும் மீள முடியவில்லை.

மேலும் படிக்க…

வெற்றி கண்ட ஒரு வரலாற்றுப் புதினம்!!

நம் கண் முன்னாலேயே பல நாட்களாக அமைதியாக அமர்ந்திருக்கும் நம் வீட்டு பூச்செடியொன்று திடீரென ஒரு நாளில் மொட்டு விட்டு, மலர்ந்து.. மலராகி…  முதல் பூ பூக்கும் தருணத்தில் மனதில் ஒரு ஆனந்தம் ஏற்படுமே, அப்படி  இருந்தது. வெற்றியின் புத்தகம் அச்சிற்கு சென்ற அந்த தருணத்தில்.

வானவல்லிகரிகாலச்சோழனின் வாழ்க்கையை மையச்சரடாக கொண்டு பின்னப்பட்ட ஒரு வரலாற்று புதினம்.  நான்கு பாகங்களை கொண்ட இந்த பெருங்காவியம்.  வானதி பதிப்பகத்தின் புதிய வெளியீடாக இந்த வருட புத்தகத் திருவிழாவை அலங்கரிக்க இருக்கிறது.

மேலும் படிக்க…

வானவல்லி – ஆசிரியருரை

சோழப் பேரரசன் கரிகாலனின் வரலாற்றை உள்ளடக்கிய வரலாற்றுப் புதினம்  ‘வானவல்லி’ வானதி பதிப்பகத்தார் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடுகிறார்கள். அதற்காக நான் எழுதிய முன்னுரை இதோ…
—————————————————————————————————–

தமிழக வரலாற்றில் பொற்காலம் என்றால் அது காதலையும், வீரத்தையும் போற்றி வாழ்ந்த சங்ககாலத்தின் ஆரம்ப காலம் தான். அச்சங்க கால மன்னர்களுள் மிகச் சிறந்தவன் கரிகாலன். சோழர்கள் தமது வல்லமையை இழந்து குறுநிலVaanavalli Part 2 மன்னர்களாகி புகழை இழந்து தஞ்சைக்கு அருகில் ஒடுங்கிய வேளையில் இக்கரிகாலனைத்தான் முன்னுதாரணமாகக் கொண்டு இழந்த புகழை மீட்டெடுத்து தெற்கே குமரி, வடக்கே கங்கை, கிழக்கே கடாரம் வரை வென்றனர். பிற்காலச் சோழர்கள் அன்றி முற்கால சேரர்களான இமயவரம்பன், நெடுஞ்சேரலாதன் மற்றும் செங்குட்டுவனுக்கும் முன்னுதாரணமாக விளங்கியவன் கரிகாற் பெருவளத்தான். தமிழக மன்னர்களுள் முதன்முதலில் இலங்கையை வெற்றி பெற்ற பிறகு இமயம் வரைப் படையெடுத்து வென்று தனது புலிச் சின்னத்தை இமயத்தில் பொறித்து போரில் தோற்ற பிற நாட்டு வீரர்களைக் கொண்டு காவிரிக்குக் குறுக்கே அணையைக் கட்டி, இரு புறங்களிலும் கரை எடுத்த மாபெரும் மன்னன் கரிகாற் பெருவளத்தான். தமிழக வரலாற்றில் யாராலும் நெருங்க இயலாத புகழின் உச்சியை அடைந்த கரிகாலன் அவனுக்குரிய அரியாசனத்தை அடைவதற்குள் அவன் அடைந்த இன்னல்களும், துயரங்களும் பல! தாய் வயிற்றில் இருக்கும்போதே தந்தையை இழந்தவன் பிறகு வளர்ந்ததும் எதிரிகளால் கைது செய்யப்பட்டு மாளிகைக்குள் அடைத்துவைக்கப்பட்டு மாளிகையோடு எரிக்க முயன்ற கொடுமையும் அவனது வாழ்வில்தான் அரங்கேறியது. அதிலிருந்து அவன் எப்படித் தப்பி எங்கெங்கு ஓடியிருப்பான் என அறியும்பொருட்டு காவிரியில் மரக்கலம் சென்றதாய் கூறும் சங்கப் பாடல்களை முனகிக்கொண்டே துளி நீர் கூட இல்லாமல் வறண்ட காவிரிக் கரையோரமாகவே முக்கொம்பு முதல் கல்லணை வரை நடந்து சென்ற அனுபவங்களை எளிதில் மறக்க இயலாது!

மேலும் படிக்க…