விறல்வேல் வீரனுக்கோர் மடல் – பதில் கடிதம்

பேரன்புள்ள நண்பனுக்கு,

வணக்கம். நான் நலம் நண்பா. நீயும் நலமாக இருப்பாய் என்று நம்புகிறேன்.

கடிதத்தைத் தொடங்கும் முன்பு எனது நல்வாழ்த்துகளை உனக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். திருமண நல்வாழ்த்துக்கள் நண்பா. ‘செம் புலப் பெயல் நீர் போல; அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே’  என்ற சங்கத் புலவனின் வாக்கினைப் போன்று தாங்கள் இருவரும் மகிழ்ச்சியுடனும், அன்புடனும் வாழ வாழ்த்துகிறேன். நீ உனது திருமணச் செய்தியை அனுப்பியபோது என்னால் வாழ்த்து மட்டுமே தெரிவிக்க முடிந்தது. நேரில் வந்து வாழ்த்த விரும்பியும், இயலாமல் போய்விட்டது. தொடர்பு கொண்டு பேசவும் இயலவில்லை. உனது இல்வாழ்க்கை எப்படி சென்று கொண்டிருக்கிறது நண்பா? முதலில் வாழ்த்து சொல்லி உனக்கு நான்தான் கடிதம் எழுதியிருக்க வேண்டும். ஆனால், எனது நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை. ஓயாத அலைச்சல், பணிச்சுமை என்று நினைத்ததை செயல்படுத்த இயலவில்லை. எதிர்பாராத நேரத்தில் கண்ட உனது கடிதம் எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது என்பதை நான் கூறி நீ அறிந்துகொள்ள வேண்டியது இல்லை என்று கருதுகிறேன்.

மேலும் படிக்க…

விறல்வேல் வீரனுக்கோர் மடல்!

அன்பு நண்பன், உடன் பிறவா சகோதரன் விறல்வேல் வீரன் வெற்றிவேல் – அவர்களுக்கு சிகரம்பாரதி எழுதும் கடிதம். நலம், நலமறிய ஆவல்.
முதலில்  உனக்கு ( ஒருமை உரிமை உண்டென எண்ணுகிறேன் ) என் இதயம் கனிந்த நன்றிகள். நன்றிகளுடன் மடல் துவங்குவதேன் என எண்ணுகிறாயா? மிக நீண்ட காலத்தின் பின் வலையுலகில் மீள் பிரவேசம் செய்திருக்கிறேன். காரணம் நீதான். நீ தந்த தொடர் உற்சாகம் தான் வலைப்பக்கம் என்னை இழுத்து வந்திருக்கிறது. இன்னுமோர் உப காரணமும் உண்டு. உனக்கிருக்கக்கூடிய எத்தனையோ நண்பர்களையெல்லாம் விடுத்து உன் கவிதையை திருத்தம் செய்ய என்னைத் தேர்ந்தெடுத்ததும் திருத்தம் செய்தபின்னும் பிரசுரத்திற்காய் என் அனுமதி வேண்டி நின்றதும் எனக்குள் ஒரு புது உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நமக்காக துடிக்கும் இதயமே ஒருவரின் உச்ச நம்பிக்கையாக இருக்கக்கூடும். நன்றி நண்பனே!

மேலும் படிக்க…

பேரன்புள்ள காதலிகளுக்கு…

பேரன்புள்ள காதலிகளுக்கு,

வெற்றிவேல், அந்தக் கடிதத்தை நீ அப்படித் தொடங்கியிருக்கக் கூடாது. அதை வன்மையாக ஆட்சேபனை செய்கிறேன் நான். நீ இப்போதிருக்கும் தருணத்தில்

“உச்சி வானில்index

மேகங்களுக்கிடையில் நீந்திக்கொண்டிருக்கும் நிலா

கீழே விழப்போகிறது…

மேற்கு வானம் எரிந்துகொண்டிருக்கிறது.

இதே போன்றதொரு மாலைப் பொழுதில்

இருவரும் உரையாடிக் கொண்டிருந்தோம்…

ஆனால்,

மேலும் படிக்க…