சிறுகதைப் போட்டி – 15 : கேட்டதும் காதல் – வி. கங்கா மோகன்

கதிரவன் சற்றே கண் விழித்து காரிருளை அகற்றும் தருணத்தில் கொஞ்சம் இருட்டு கொஞ்சம் வெளிச்சம் எனத் தோன்றும் அதிகாலை வேளையது. நீண்ட நெடுஞ்சாலையில் வாகனங்களின் ஒளிக்கு இடையில் நெடுந்தூரத்தில் ஓர் உருவம். வயதில் முதுமையும் நடையில் இளமையும் ஒருசேரக் கொண்ட அவரின் ஒரு கையில் தூக்குச்சட்டியும், மறுகையில் ரொட்டி பாக்கெட்டுடன் நடந்து வர, “என்ன இன்னைக்கு சீக்கிரமாவே டீ வாங்கிட்டு போறீங்க” என்று கேட்ட நண்பரிடம் “ஆமாங்க என்னோட சின்னப் பொண்ணுக்குப் பரிச்சை அதான்” என்று சொல்லிக்கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் ராஜ். வீட்டிற்கு வந்து டீ ரொட்டி இரண்டையும் தன் இளைய மகள் தமயந்தி இடம் குடுத்து, “இத குடிச்சிட்டு படிமா” என்றார் ராஜ். தமயந்தி இவள்தான் குடும்பத்தின் கடைக்குட்டி, அப்பாவின் செல்லமகள். ஓங்கி வளர்ந்த பனைமரம் என்று சொல்லும் அளவுக்கு சற்றே உயரமானவள். ஒல்லியான உருவம், பேச்சிலே எல்லோரையும் கவருபவள், அந்த பேச்சிலே நல்ல சிந்தனையும், தெளிவும், கம்பீரமும் நிரம்பியிருக்கும். இப்படி புறஅழகைக் காட்டிலும் அகத்தின் அழகிலே கர்வம் கொண்டவள்.

மேலும் படிக்க…

சிறுகதைப் போட்டி – 13 : விண்ணைத் தொடு – பத்மா

பெங்களூரில் இஸ்ரோ விஞ்ஞானிகள் குடியிருப்பில் ஆதினியின் வீடு பரபரப்பாக இருந்தது. போர்டிகோவில் நாற்காலிகள் போடப்பட்டு பத்திரிக்கையாளர்கள் அனைவரும் அமர  வைக்கப்பட்டிருந்தனர். அனைவரும் இஸ்ரோ குடியிருப்பு விதிமுறைப்படி பாதுகாப்பு சோதனைகளைக் கடந்து ஆதினியின் வருகைக்காகக் காத்திருந்தனர்.

ஆதினி, இஸ்ரோவில் இளம் விஞ்ஞானி. இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆகாஷ்பவனில் மூன்று மாதம் தங்கியிருந்து அங்கு ஆட்டோமேஷன் அப்ளிக்கேஷன்களைப் புதுப்பிக்கும் பொறுப்புக்கு இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாள். ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த புதுப்பிக்கும் பணியில் சென்ற முறை அனுபவத்தின் காரணத்தாலும் அவளின் திறமையான பணித்திறன் காரணமாகவும் இஸ்ரோ இரண்டாம் முறையாகவும் அவளையே தேர்ந்தெடுத்துள்ளது.
மேலும் படிக்க…

சிறுகதைப் போட்டி – 4 : அற்றைத் திங்கள் – பத்மா

“வணக்கம் அய்யா, தங்களைப் பார்த்தால் பரம்பு நாட்டைச் சார்ந்தவராக தோன்றவில்லை. பழக்கப்படாதார் இந்த மலைகளில் ஏறி வருவது சற்று சிரமம். தாங்கள் யார், பரம்பு மலைக்கு யாரை பார்க்க வந்துள்ளீர்கள் என அறியலாமா?” கேட்ட இளைஞனை கூர்ந்து பார்ததார் கபிலர்.

கபிலர், மூவேந்தர்களும் போற்றும் புலவர். பல அரச குமார்களுக்கும் இளவரசிகளுக்கும் ஆசிரியர். பாணர்கள் வாயிலாக பரம்பு மலை குறித்தும் பாரி குறித்தும் அறிந்தவர் முதல் முறையாக பரம்பு மலைக்கு பாரியை பார்க்க வந்துள்ளார்.
மேலும் படிக்க…

சிறுகதைப் போட்டி – 3 : யாரினும் இனியன் – பத்மா

யாரினும் இனியன் பேரன் பினனே

உள்ளுர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்

சூல்முதிர் பேடைக்கு ஈன்இல் இழை இயர்

தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்

நாறா வெண்பூக் கொழுதும்

யாணர் ஊரன் பாணன் வாயே –

தலைவி கருவற்றிருக்கிறாள். தலைவன் தலைவியின் அருகில் இருந்து கவனித்துக்கொள்ளவில்லை. தலைவிக்கு இதனால் தலைவன் மேல் கோபம். தோழியிடம் தலைவனைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறாள்.

மேலும் படிக்க…

சிறுகதைப் போட்டி – 2 : சேர்வேன் அவனிடம் – ராஜேஷ்  

வளம்கொழிக்கும் வளைகுடா நாடுகளில் ஆண்டவனின் அருட்கொடை கொண்ட ஐக்கிய அமீரகம் அமைதியும் ஆளுமையும் கொண்ட நாடு. அதில் தொழில் நகரமாய் அறியப்படும் சார்ஜாவில் கான்க்ரீட் காடுகளின் நடுவில் ஒற்றை பனைமரமாய் உயர்ந்து நிற்கும் ஐரோப்பிய ரசனையுள்ள கட்டிடத்தின் பத்தாம் நிலையில் ஒரு வீடு. இரண்டு படுக்கையறை ஒரு வராண்தவுமாய் இருந்த அதை வீட்டின் ஒற்றை அறையை கேரளத்து சேட்டன்கள் ஆக்கிரமித்து இருந்தனர் மற்ற அறையில் குமரனும் அவனது அலுவலக சகாக்களுமாய் அந்த அறையைப் பகிர்ந்து கொண்டிருந்தனர். அன்று வெள்ளிக்கிழமை வாரவிடுமுறை தினம். குமரனின் அறையில் அவனைத் தவிர எல்லோரும் விடுமுறையை அனுபவிக்க வெளியே சென்றுவிட்டனர்.

மேலும் படிக்க…