வானவல்லி முதல் பாகம் : 34 – சோழ குல கதிரவன்

3

“உன்னை நம்பலாம் தானே!”

“அரசே! நான் முதன்மை மந்திரியின் தீவிர விசுவாசி! என் குடும்பமே அவரது உதவியின் பேரில் தான் பிழைத்துக்கொண்டிருக்கிறது! உங்களுக்கு நான் துரோகம் செய்வேனா?” என்றான் திருக்கண்ணன். அந்நேரத்தில் முதன்மை மந்திரியை இழுத்தால் தான் தன்மீது அவருக்கு எந்தவித சந்தேகமும் நேராது என்பதைத் தெரிந்தே திருக்கண்ணன் அவரது பெயரைப் பயன்படுத்தினான். அதற்கு இன்னொரு காரணம். அங்கு அவர் இல்லாதது தான்!

அந்த இடமே அதிரும்படி சிரித்த மன்னர், “ஒழிந்தார்கள் நம் எதிரிகள்! இளவரசனும் எரிந்தான். அவனைக் காக்க முயன்ற உப தலைவனும் ஒழிந்தான்!” எனக் குதூகலித்தார்.

“உள்ளே நுழைந்தவன் செங்குவீரனாகத்தான் இருப்பான் என எப்படி அரசே எண்ணுகிறீர்கள்!? என வைதீகர் கேட்கலானார்.

“நிச்சயமாகப் பிரம்மாயரே! அவனாகத் தான் இருப்பான். அவன் மடிந்ததற்கு அவனது புரவியே சாட்சி! ஆனால் எனக்கு ஒரு வருத்தம். இப்படிப்பட்ட இராஜ விசுவாசமுள்ள வீரனை நாம் இழந்துவிட்டோமே!” எனச் செங்குவீரனை எண்ணி வருந்தவும் செய்தார்.

பின்னர், “இந்த நாள் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய பொன்னாள்! நம்மை எதிர்த்த இருவரையும் பூண்டோடு நெருப்புக்கு இரையாக்கிவிட்டோம்” என அவர் கூறிக்கொண்டிருந்த போதே அவ்விடத்திற்கு வேந்தனும் வந்து சேர்ந்தான்.

தனது மகிழ்ச்சியை வேந்தனிடமும் கூறிப் பகிர்ந்துகொண்ட மன்னர், “எதற்கும் நீ காவிரிக் கரையோரமாக இருபுறத்திலும் விடியும் வரை நம் வீரர்களைத் தேடச் சொல்!” எனக் கட்டளையிட்டுவிட்டு மீண்டும் மகிழ்ச்சியில் சிரிக்கலானார். அந்தச் சிரிப்பில் பொதிந்துகிடந்த அவரது கனவுகள் அனைத்தும் அவரது கண்களில் வெளிப்பட அதைக்கண்ட பட்சிகள் அனைத்தும் பதறி மரக்கிளையிலிருந்து தாவிப் பறந்தோடின.

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here