வானவல்லி முதல் பாகம் : 39 – தொடுக்கப்பட்ட கேள்விக் கணைகள்

கண்ணீரைத் துடைத்தபடியே வானவல்லி வெளியே வந்து தேடினாள். ஆனால், அதற்குள் விறல்வேல் அங்கிருந்து மறைந்துபோயிருந்தான். விறல்வேலைக் காண இயலாத வானவல்லி காவிரிக் கரையோரம் இருளில் கிடந்த பாறை ஒன்றின் மீது அமர்ந்தபடியே அழுதுகொண்டிருந்தாள். அவளது கண்ணீர்த் துளிகள் ஒவ்வொன்றாகப் பொன்னி நதியில் முத்து முத்தாகச் சிந்திக் கொண்டிருந்தது!

அவ்வேளையில் அவளது தோள்களை ஆதரவாக ஒரு கை பற்றியது. எங்கே தன் தலைவர் தான் வந்துவிட்டாரோ என ஆர்வத்துடன் பின்னால் பார்த்தாள். அங்கே நின்றுகொண்டிருந்தது மரகதவல்லி. விறல்வேல் சென்றுவிட்டதை எண்ணிய வானவல்லிக்குத் துக்கம் தொண்டையை அடைக்க மரகதவல்லியின் மீது சாய்ந்துகொண்டு அழத்தொடங்கினாள்! அழுவதைத் தவிர அவளால் வேறெதையும் அப்போது செய்ய இயலவில்லை!

அடிக்குறிப்பு :

கரிகாலனின் இயற்பெயர் வளவன் என்பதுதான். அவர் காவிரியின் இருபுறத்திலும் கரையை எழுப்பி, உறையூர் அருகே அணையைக் கட்டி காடுகளை அழித்து வயல்வெளிகளாக்கிச் சோழ நாட்டை வளமுடைய நாடாக்கியவன். ஆதலால் தான் கரிகாலனை கரிகாற் பெருவளத்தான் என சிறப்புடன் அழைப்பர். திருமாவளவன், பெருவளத்தான், மாவளத்தான் என்பன போன்ற பெயர்கள் இவரது செல்வ வளத்தைக் காட்டுவன. இயல்தேர் வளவன் எனவும் புறநானூற்றில் குறிப்பிடப்படுகிறார்.

வடக்கிருத்தல்: தருப்பைப் புல்லின் மீது வடக்குத் திசையை நோக்கி அமர்ந்து உண்ணா நோன்பிருந்து உயிர் துறப்பது ஆகும். வடக்கிருத்தலை சல்லேகனை எனவும் கூறுவர். பொறுக்க முடியாத மனவேதனையைத் தருகிற இடையூறு, தீராத நோய், மிகுந்த மூப்பு இவை உண்டான காலத்தில் சல்லேகனை செய்து உயிர் விடலாம் என்பது சமண மதக் கொள்கை.

இடையூறு ஒழிவில்நோய் மூப்புஇவை வந்தால்

கடைதுறத்தல் சல்லே கனை. (பழம் பாடல்)

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

 

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here