வானவல்லி முதல் பாகம் : 43 – உறைந்தைத் தூதுவன்

உப தளபதிகளின் திடீர் மாறுபட்ட செயல் அங்கிருந்த பெரியவர்கள் மூவருக்கும் பெருத்த ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் அளித்திருந்தது. அந்த அதிர்ச்சியிலிருந்து அவர்கள் மீள்வதற்குள் டாள்தொபியாஸ் இரும்பிடர்த்தலையரிடம், “அய்யா! நாங்கள் ஏதேனும் பிழையாகப் பேசியிருந்தால் எங்களைப் பொறுத்தருளுங்கள்! நிச்சயம் இளவலோடு உப தலைவர் சரியான நேரத்திற்கு வந்து சேர்வார் என நாங்கள் நம்புகிறோம். இருங்கோவேள் புகாரில் இருக்கும் போது நீங்களும் இங்கு இருப்பது பெரும் ஆபத்து. எங்காவது சென்று மறைந்திருங்கள்! மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்!” எனக் கூறிய பின் உப தளபதிகள் மூவரும் அவர்களின் மறுமொழியைக் கூட எதிர்பாராமல் அங்கிருந்து கிளம்பினார்கள். பெரியவர்கள் மூவரும் உப தளபதிகள் செல்லும் திசையையே பார்த்துக்கொண்டிருக்க வானவல்லி மரகதவல்லியிடம் சென்றாள்.

“இளவரசன் கரிகாலனது நிலை என்ன ஆனதென்றே தெரியவில்லை, பக்க பலமாக இருந்த உப தலைவனை வேறு காணவில்லை. உப தளபதிகள் வளவனாரின் கட்டளைக்குக் கீழ்படிய மறுக்கிறார்கள். எஞ்சியிருக்கும் புகாரைக் கைப்பற்ற இருங்கோவேள் முழு மூச்சில் இறங்கிவிட்டான். இளவலுக்குத் தகுந்த வயது அடைந்ததும் அவரைச் சோழ அரியணையில் நிச்சயம் அமர்த்துவேன் என மரணப் படுக்கையில் இருந்த இளஞ்சேட்சென்னிக்கு நான் கொடுத்த வாக்கினை என்னால் காப்பாற்ற இயலுமா?” எனக் கலங்கியபடியே இரும்பிடர்த்தலையர் நின்றார்.

அடிக்குறிப்பு

கலாபதி – மரக்கலத் தலைவனுக்குக் கலாபதி எனப் பெயர்.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here