வானவல்லி முதல் பாகம் : 48 – டாள்தொபியாசின் உபசரிப்பு

6

புகாரில் இந்திரத் திருவிழா ஆரம்பித்துவிட்ட நிலையில் உறைந்தையிலிருந்து புகார் செல்லும் ராஜபாட்டை படு அமர்க்களமாகக் காணப்பட்டது. அதிலும், உறைந்தையில் சோழ மாமன்னராக முடிசூடிக்கொண்ட இருங்கோவேள் புகாருக்கு தன் அமைச்சர்கள் மற்றும் தளபதிகள் சூழ சென்றுகொண்டிருந்ததால் பயணத்தில் இடைப்பட்ட கிராமங்கள் மற்றும் பட்டினங்களில் பெரும் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புகார் மற்றும் அழுந்தூரைத் தவிர்த்த குறுநில மன்னர்கள் மற்றும் வேளிர்கள் அனைவரும் இருங்கோவேளை ஆதரிக்க முடிவுசெய்துவிட்ட படியால் போட்டிபோட்டுக் கொண்டு இருங்கோ வேளை உபசரித்து வரவேற்கலாயினர்.

விறல்வேல்
வானவல்லி

அனைத்து கிராமங்களின் வரவேற்பு மற்றும் மரியாதையை ஏற்று வந்தமையால் வெண்ணியில் ஓய்வெடுத்துப் பயணத்தைத் தொடங்கலாம் என முடிவு செய்து கோட்டைக்குச் சென்றார்! ஒரு நாழிகைப் பொழுதிற்குப் பிறகு அவர் சிறிதும் எதிர்பாராதபடி வேந்தனும், வைதீகரும் அங்கு வருகை தந்தனர். வேந்தனை எதிர்பாராத மன்னர், “வேந்தா! யுவராஜனுக்கு பாதுகாப்பாக வஞ்சிமா நகரம் அல்லவா உன்னை அனுப்பியிருந்தேன். நீ மட்டும் வந்திருக்கிறாய்! யுவராஜன் எங்கே?” என வினவினார்.

வேந்தன் பதிலேதும் கூற இயலாமல் நிற்க வைதீகர் குறுக்கிட்டு, “அரசே, நமது திட்டங்கள் அனைத்தையும் பாழாக்க எதிரிகள் யாரும் தேவையில்லை! தங்கள் மகனே போதும்!” எனக் கடும் கோபத்துடன் கூறலானார்.

வைதீகர் கோபம் கொள்வதன் காரணத்தை அறிந்திராத மன்னர், “என்ன நடந்தது பிரம்மாயரே! கோபம் வேண்டாம்!” என்றார்.

“அரசே, யுவராஜன் பட்டம் சூட்டிய தங்கள் மகனை புகார் மன்னனாக முடிசூட்டி வளவனார் மகளை மனம் முடித்து வைத்துவிடுவது தானே நமது திட்டம்?”

“ஆம் பிரம்மாயரே! அதில் என்ன சந்தேகம்!”

“அரசே! இனி அது நடக்காது என எண்ணுகிறேன்” இடை மறித்துத் தெரிவித்தான் வேந்தன்.

“வேந்தா, ஏன் இப்படிக் கூறுகிறாய்? என்ன நடந்தது? விளக்கமாக கூறு!” பதற்றத்துடன் கட்டளையிட்டார் மன்னர்.

“அரசே! கருவூர் வஞ்சி மாநகரம் சென்று சேரமான் பெருஞ்சேரலாதனைச் சந்தித்துவிட்டுத் திரும்புகையில் அங்கு வளவனார் மகள் வானவல்லியைப் பார்த்தோம்!” எனக் கூறிவிட்டு அமைதியாகிவிட்டான் வேந்தன்.

“தயக்கம் வேண்டாம் வேந்தா! தொடர்ந்து கூறு”

“நான் எவ்வளவோ தடுத்து அறிவுரை கூறியும் கேட்காமல் தங்கள் மகன் வளவனார் மகளை மாளிகையில் சிறைவைத்து விட்டார்!”

வேந்தன் கூறியதைக் கேட்டு கடும் ஆத்திரமும், சினமும் கொண்ட மன்னர் ஆசனத்திலிருந்து எழுந்து நின்றவர் வைதீகரைப் பார்த்து, “இவன் கூறுவது…..” “ஆம் அரசே! இவன் கூறுவது முற்றிலும் உண்மை தான். புகாரில் இருந்த எனக்கும் செய்தி வந்தது. ஆதலால் தான் புகாரில் உங்களை வரவேற்க காத்திருந்தவன், உங்களைத் தேடி ஓடி வர நேர்ந்தது. வெண்ணி வந்த பிறகு தான் வேந்தனைச் சந்தித்து முழு நிலவரத்தையும் தெரிந்துகொண்டேன்!” எனப் பதிலளித்தார்.

நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடி வருகையில் தனது மகனின் காரணமறியாத செயலை நினைத்து வருந்திய மன்னர், “வேந்தா, இந்தக் காரியத்தை அவன் ஏன் செய்தான்?” என வினவினார்.

“சில கிழமைக்கு முன் தங்கள் மகன் புகார்க் கோட்டைக்குப் பொறுப்பேற்கச் சென்றபோது செங்குவீரன் அவமதித்து அனுப்பியமைக்கு அவனது காதலியைப் பழி வாங்குகிறேன் எனக் காரணம் கூறினார்!” என்றார்.

“இது என்ன முட்டாள் தனம் வேந்தா, செங்குவீரனே நம்மால் கொல்லப்பட்டு விட்டான்! அதன் பிறகு வளவனாரின் மகளை சிறை வைப்பதனால் யுவராஜனுக்கு என்ன மகிழ்ச்சி கிடைத்துவிடப் போகிறது!”

“நான் வினவினேன் அரசே!”

“அதற்கு அவன் என்ன பதிலளித்தான்?”

“நான் மணக்கப் போகும் பெண்ணுக்கு இரு நாள் விருந்தளித்து அனுப்புகிறேன் எனத் தெரிவித்தார்”

அந்தப் பதிலுக்கு மன்னரால் எதையும் கூற இயலாமல் சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில் “மன்னாதி மன்னர் இருங்கோவேளின் புதல்வர், சோழ தேச யுவராஜன் கோட்டைக்கு வருகை தருகிறார். பராக்… பராக்…” எனக் கட்டியங்காரனின் உரத்த குரல் எழ மூவருமே வாசலை நோக்கினர். அங்கே கடும் கோபத்துடன் யுவராஜன் வருகை தர அவனுக்குப் பின்னால் காளனும் வந்துகொண்டிருந்தான்.

யுவராஜன் உள்ளே நுழைந்ததும் கடும் கோபத்துடன் “மூடனே, அனைத்து காரியத்தையும் இப்படிக் கெடுத்துவிட்டாயே? ஏன்?” எனக் கேட்க இருங்கோ வேள் வாயெடுக்க அதற்குள் முந்திக்கொண்ட யுவராஜன், “தந்தையே, வைதீகர் இத்தனை நாட்களாக ஒரு ஒற்றனை நம்முடன் இருக்கச் செய்துள்ளார்! அவரது செயல் சரியா என விசாரியுங்கள் தந்தையே!” என அந்த அரங்கமே அதிரும்படி கத்தினான்.

“நம் கூட்டத்திற்குள் ஒற்றனா? யாரைக் குறிப்பிடுகிறாய் மகனே!” கடும் கோபத்துடன் வினவினார் மன்னர்.

“வைதீகர் காளனுக்குத் துணையாக இருக்கச் செய்தாரே, அந்த வில்லவனைத் தான் குறிப்பிடுகிறேன்!”

“வில்லவன் ஒற்றனா? என்ன கூறுகிறீர் தம்பி!” ஏமாற்றத்துடன் வைதீகரிடமிருந்து சொற்கள் வெளிப்பட்டன.

“ஆம் பிரம்மாயரே! தங்களுக்கு என் மீது சந்தேகம் இருந்தால், தங்களது சீடன் காளனிடமே கேட்டு உறுதிப் படுத்திக்கொள்ளுங்கள்!”

வைதீகர் காளனைப் பார்க்க காளன் தலையைத் தொங்க போட்டுக் கொண்டான்.

“என்ன நடந்தது காளா! மறைக்காமல் அனைத்தையும் கூறு!”

முகத்தில் சோகத்தையும், ஏமாற்றத்தையும் வரவழைத்துக் கண்ட காளன், “ஆம் அய்யா! யுவராஜன் கூறுவது அனைத்தும் உண்மையே! இத்தனை நாட்களாக ஒரு ஒற்றனை என்னுடன் இருக்கச் செய்துள்ளீர்கள்.”

“நான் இருக்கச் செய்தேனா?”

6 COMMENTS

  1. Целый вечер смотрел данные инета, случайно к своему удивлению открыл восхитительный вебсайт. Ссылка на него: [url=http://antikazino.ru/kazino-azartplay-realnye-otzyvy/]azartplay мобильная версия[/url] . Для нас вышеуказанный сайт явился очень важным. Хорошего дня!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here