கி.மு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சு நாட்டுப் பள்ளத்தாக்கில் நடைபெற்ற கதை…
தன் குல தலைவனால் அடித்து விரட்டியடிக்கப்பட்ட ஆதன், மூத்தோளின் அறிவுறுத்தலின் படி துருவ வனத்தை நோக்கிச் செல்கிறான். அங்கிருந்து திரும்பி வரும்போது நீலியை சந்தித்தவன் காதல் கொள்கிறான். தன் காதலைக் கூறிய போது நீலி, “உன் குலத்தை அழிக்கச் செல்லும் என் காதலனைத் தடுத்து, முடிந்தால் அவனைத் தோற்கடித்து அவன் தலையுடன் வா, உன்னுடன் உடன்போக்கு மேற்கொள்கிறேன்” என்று சவால் விடுகிறாள்.
அவளது நிபந்தனையை விடவும், அவள் கூறிய தகவல் அவனைத் திடுக்கிடச் செய்கிறது. தன் குல மக்களைக் காக்க நினைக்கிறான் ஆதன். தன் குல மக்களை பகைவர்களிடமிருந்து காத்தானா? தன் காதலியின் சவாலை நிறைவேற்றினானா?
Reviews
There are no reviews yet.