’தனக்கு ஒப்பாரும் இல்லை; மிக்காரும் இல்லை’ எனப் பெரும் புகழ் படைத்த சோழப் பேரரசன் கரிகாற் பெருவளத்தானின் வீர வரலாறு.
வளவன் தாயின் வயிற்றில் இருந்த போது தந்தையையும், பிறந்த பிறகு தாயையும் இழந்தவன். வளர்ந்த போது தன் பகைவர்களிடம் நாட்டையும் இழந்தவன். அதற்குப் பிறகு தன் மாமன் இரும்பிடர்த்தலையருடன் சேர்ந்து போராடி சேரர், பாண்டியர் மற்றும் பதினொரு வேளிர்களை எதிர்த்துத் தோற்கடித்து, தனக்குரிய சோழ உரிமையை மீட்டு, சோழ தேசத்தின் பெருவேந்தனாக முடி சூடியவன்.
வெண்ணிப் போரில் வேளிர்களைத் தோற்கடித்து, வடக்கே படையெடுத்துச் சென்று இமயத்தில் புலிக்கொடியைப் பதித்த கரிகாலனின் வீர வரலாறே, வானவல்லி.
Reviews
There are no reviews yet.