சுதந்திர நாடுகளாக விளங்கிய தமிழகம் மற்றும் கலிங்கத்தைக் கைப்பற்றி பாரதவர்சத்தின் பேரரசனாக முடிசூட நினைக்கிறான், மௌரியப் பேரரசன் அசோகவர்த்தன். அவனது கட்டளையை ஏற்ற மௌரியப் படையினர் கலிங்கத்தை அழித்து சூரையாடுகிறார்கள். எஞ்சியிருப்பது தமிழகம் மட்டும் தான். ஆனால், அவர்களின் முயற்சிக்குக் குறுக்கே நிற்கிறான், சோழ இளவரசன் வென்வேல் சென்னி.
”கரும்பெண்ணை நதியைக் கடக்க எவன் நினைத்தாலும், அவன் தன் காதலியைத் தழுவுவதற்குத் திரும்பிச் செல்ல மாட்டான்” என்று அறைகூவல் விடுகிறான்.
பாரதவர்சத்தின் மிகப்பெரிய போரில் வெற்றி பெற்றது யார்?
Reviews
There are no reviews yet.