சிறுகதைப் போட்டி – 9 : அறம் இதுதானோ? – அருண்குமார்

சோழநாடு வளமான நாடு. அந்த வளமை இயற்கையின் செழுமையால் கிடைத்தது மட்டுமின்றி எதிரிகளின் அழுகையால் அடித்து பெறப்பட்ட செல்வங்களும் அடங்கும்.

அந்த அரசன் பெயர் புலிவேந்தன். புலிக் கொடி பொறித்த நாட்டை ஆள்பவன். அவன் அப்பா ராஜாவாக இருந்த போது மூவேந்தர்களில் மற்ற இருவரை அடக்கி ஒடுக்கி அவர்களின் இடம் பெரும்பாலானவற்றை பிடித்து விட்டார். இவன் ஆட்சிக்கு வந்த போது மற்ற இரு அரசர்கள் குறுநில மன்னர்களின் நிலைக்கு வந்திருந்தனர். செங்கொடி வழுவாமல் ஆட்சி செய்யும் என்று சொல்லப்பட்ட பரம்பரையில் வந்த இவன் போரின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவன். மற்ற அரசர்கள் வேட்டைக்கு செல்வது போல இவன் போருக்கு சென்று கொண்டிருந்தான்.

காவிரி நதிக்கரையில் பௌர்ணமி இரவில் தன் மகாராணியுடன் களித்திருக்கையில் மகாராணியுடன் சல்லாபித்திருந்தான். அந்த நேரத்தில் அனைத்து மக்களும் அங்கு கூடியிருந்தனர். ராஜாவிற்கு மட்டும் தனி குடில் போன்று எழுப்பியிருந்தனர்.

மாதாமாதம் இந்த நாள் மக்கள் அனைவராலும் கொண்டாடப்படுவது. மக்கள் அனைவரும் இந்த நாளில் சோறு கட்டி எடுத்து வந்து இரவு முழுவதும் இருந்து மகிழ்ந்து விட்டு போவர். திருமணம் ஆனவர்கள் தன் மனைவிமார்களுடன் சல்லாபித்து கொண்டிருப்பனர். விடலை ஆண்களும் பெண்களும் தன் இணையர்களுடன் கொஞ்சி கொண்டிருப்பனர். குழந்தைகள் அங்கே இங்கே என்று ஓடி பிடித்தும் மணல் வீடு கட்டியும் விளையாடி கொண்டிருப்பர். அவர்கள் நீருக்கு அருகில் சென்று விடாமல் பார்த்து கொள்ள வீரர்கள் இருப்பதால் அவர்களின் பெற்றோர்கள் நிம்மதியாக தன் இணையருடன் பொழுதை கழித்து கொண்டிருப்பர். நாட்டு மக்கள் மகிழ்ச்சியில் திளைத்திருப்பதை எண்ணி ராஜாவும் தன் ராணியுடன் மகிழ்ச்சியாக இருந்தான்.

அதே காவிரியின் எதிர்க்கரையில் சேர நாட்டின் ஒரு பகுதி உள்ளது. அங்கும் பௌர்ணமி தான். ஆனால் மக்கள் யாரும் அங்கு இல்லை. அடிக்கடி நிகழும் போரினால் அங்கிருந்த பெரும்பாலான ஆண்கள் புரட்சிப் படைகளில் இணைந்திருந்தனர். மாலை ஆறு மணிக்கு மேல் பெண்களும் குழந்தைகளும் வெளியில் வருவதை நிறுத்தியிருந்தனர். அங்கிருந்த ஒரு வீட்டில் ஒரு குழந்தை தன் அம்மாவிடம் நாமும் நதிக்கரைக்கு சொல்வோமா என்று கேட்டது. அதன் அம்மா அதனிடம் என்ன சொல்லி ஆற்றுவது என்றறியாமல் தன் போக்கில் கண்ணீர் சிந்தி கொண்டிருந்தாள். இரவில் உடல் உபாதைகளை கூட கழிக்க முடியாத நிலை. எப்பொழுது வேண்டுமானாலும் போர் நிகழலாம் என்றிருக்கும் நிலையில் நிலையில் வீட்டை விட்டு வெளியில் செல்வது கூட தடை செய்யப்பட்டு விட்டது. மீறி வந்தால் அவர்களின் ஆட்களே இரவின் இருளில் கொன்று விடும் அபாயம் உள்ளது. வீட்டுக்கு வேண்டியது எல்லாம் மாலைக்குள் எடுத்து வைத்து விட வேண்டும். குழந்தைகளுக்கு பால் வேண்டும் என்றாலும் அதன்பின் கிடைக்காது.

அப்படி பல இரவுகள் பல வீடுகளில் பல குழந்தைகளின் அழுகுரல்களுக்கிடையே தான் அதனை கேட்க முடியாத சோகத்தில் சூரியன் மறைந்துள்ளான். அவர்களின் அழுகைகளை நீக்க முடியாத சோகத்தில் தன் பால் வராத மாரை வாயில் திணிக்கும் தாய்மார்களும் இங்கு உள்ளனர். இங்குள்ள பலரின் கணவன்மார்கள் ஒன்று இறந்திருப்பார்கள் அல்லது புரட்சி படையில் இணைந்திருப்பார்கள். அவ்வாறு இணைந்தவர்கள் குடும்பங்களை மறந்து விட வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

அங்கிருக்கும் இறைவன் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் மறுகண்ணில் வெண்ணெயும் வைத்து கொண்டிருந்தான்.

சோழ தேசம் மக்கள் நதிக்கரையில் இருப்பதை அறிந்து கொண்ட புரட்சி படை வீரர்கள் அவர்களின் நாட்டுக்குள் புகுந்து ஆநிரைகளை கவர்ந்தும் அவர்களின் சில வயல்களை கொளுத்தி விட்டும் அதனை தடுக்க வந்த சில வீரர்களை கொன்று விட்டும் சென்றனர்.

இதனை அறியாத அரசரும் மக்களும் நதிக்கரையில் ஆனந்தத்தில் திளைத்திருந்தார்கள். அடுத்தநாள் காலை அரசருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் போர் தொடுத்து செல்ல முடிவெடுத்து விட்டார்.

அது அந்த அரசின் செயல் அல்ல என்று இவர்களுக்கும் தெரியவில்லை. வருபவர்களை எப்படி தடுத்து நிறுத்துவது என்று அந்த அரசனுக்கும் தெரியவில்லை‌. படை புறப்பட்டது. வாளின் ஓசைகள் எட்டுத்திக்கும் ஒலித்தது. அதிலிருந்து வெளிப்பட்ட ஒளி கண்கூசும் அளவிற்கு இருந்தது. குதிரைகளின் குளம்பின் ஓசையும் அதன் மூலம் வெளிப்பட்ட புளுதியும் வானை மறைத்தன.

சென்றவன் சிறிது நேரத்தில் அந்த படையை அழித்து ஒழித்து விட்டான். காணும் இடம் எங்கும் செங்குருதி. வானமெங்கும் வட்டமிடும் வல்லூறுகள். வெற்றி வெற்றி என்ற கோஷம். புறமுதுகிட்டு ஓடுபவர்களை துரத்தி சென்று வெட்டினார்கள். ஒருவரும் தப்பவில்லை.

அவர்களை கொன்றொழித்து விட்டு ஊருக்குள் சென்றனர். பெண்களை வன்புணர்ந்தனர். மறுத்த பெண்களை ஈவிரக்கமின்றி கொன்றனர். ஒவ்வொரு வீட்டில் இருக்கும் அடுத்த வேளை உணவு முதல் இருக்கும் சிறுசிறு செல்வம் வரை அனைத்தையும் கொள்ளை அடித்தனர். ஊரே அலங்கோலமானது. மன்னனின் முகத்தில் வெற்றிக் களிப்பு.

தன் நாட்டுக்கு வெண்குற்ற கொடையுடன் யானை மீது வந்து சேர்ந்தான். மக்களின் வாழ்த்தும் மகிழ்ச்சியும் மன்னனுக்கு பேருவகையை அளித்தது. இதையெல்லாம் தாண்டி அவன் அவனது அரண்மனையை நோக்கி வந்தான். ராணி மற்றும் அந்தப்புர ராணிகள் வந்து ஆர்த்தி எடுத்து வரவேற்க அவன் மஞ்சத்தில் சென்று ஓய்வெடுத்தான்.

அடுத்தநாள் எப்போதும் வழக்கம் போல் பார்ப்பனர்களுக்கும் கவிகளுக்கும் சன்மானம் வழங்கும் நாள். தன்னை பாராட்டி பாட்டியற்றிய கவிகளுக்கும் தன் வெற்றிகளுக்கு தன் பூஜை புனஸ்காரங்கள் மூலம் உறுதுணையாக இருக்கும் பார்ப்பனர்களுக்கும் சன்மானம் அளிக்கும் நிகழ்வு.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here