சிறுகதைப் போட்டி – 22 : அருளும் அன்பும் – சி.மணி

அதிகாலை நேரம் வீட்டின் தின்ணையில் செய்தித்தாளை வாசித்துக்கொன்டிருந்தார்  சோலைமலை. அவர் அருகில் அமர்ந்து புத்தகத்தை புரட்டிக்கொன்டிருந்தான் செழியன்.

“என்ன செழிய ஆர்வமா ஏதோ புத்தகத்தை புரட்டி குறிப்பெடுக்கிறமாதிரி தெறியுது” என்று சோலைமலை கேட்க,

“ஆமா தாத்தா எங்க பள்ளிக்கூடத்தில நாளைக்கி ஆண்டுவிழா நான் கட்டுரை போட்டியிலயும், பேச்சு போட்டியிலயும் கலந்துக்கிறேன். அதுக்காக நூலகத்தில எடுத்துகிட்டு வந்த புத்தகத்தில இருந்து குறிப்பெடுத்துகிட்டுருக்கேன் தாத்தா. ‘புறநானூற்றில் தமிழரின் கருனையும் வீரமும்’ என்ற தலைப்பில்  நான் பேச்சு போட்டியில பேசப்போறேன் தாத்தா” என்றான் செழியன்.

சொன்னதும் அவருக்கு ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. தமிழ் மீது அவன் கொன்டுள்ள பற்றை கண்டு வியந்த சோலைமலை தானும் மாணவப் பருவத்தில் இந்தி தினிப்பை எதிர்த்து தமிழை காக்க போரடியதையும், தமிழுக்காக தடியடிபட்டதும்,உயிரை விட மொழி மேல் என நினைத்து பலர் தீக்குளித்ததும் அவரது கண்முன்னே காட்சியாக வந்துபோனது.

“தாத்தா என்ன எதும் பேசாம ஏதோ சிந்தனையில இருக்கிற மாதிரி தெரியுது”, என்று அவரை பார்த்து கேட்டான் செழியன்.  “ஒன்னுமில்லை நீ புறநானூற்றில் தமிழரின் கருனையும் வீரமும் என்ற தலைப்பில்  பற்றி சொன்னதால் மொழிப்போர் பற்றிய நினைவு வந்தது” என்றார்.

“சரி தாத்தா நீங்க கன்டிப்பா ஆண்டுவிழாவிற்க்கு வரணும்” என்றவன் தயக்கத்தோடு “தாத்தா… ஆண்டுவிழாவுக்கு சிறப்பு விருந்தினரா அமைச்சர் கூத்தரசன் வருவாராம் அதனால நீங்க வருவீங்களா தாத்தா” என்று செழியன் கேட்க. சிறு தயக்கத்துக்கு பிறகு வருகிறேன் என்றார் சோலைமலை.

அமைச்சர் கூத்தரசன் என்று சொன்னவுடன் அவருக்கு நினைவுக்கு வந்தது  கூத்தரசன் ஊருக்கு ஒதுக்குபுறமாய் உள்ள விவசாய நிலங்களை சாராய ஆலை கட்டுவதற்காக ஏழை மக்களின் விளைநிலங்களை தன் பண பலத்தாலும், அமைச்சர் என்ற அதிகார பலத்தாலும் மிரட்டி வாங்கி அந்த இடத்தில் சாராய ஆலைக்கு கட்டிடம் கட்டும் பணி நடந்துகொண்டிருக்கிறது.  அமைச்சரை எதிர்க்க ஆள் இல்லை என்ற தொனியில் விவசாயிகள்  அச்சுறுத்தப்பட்டனர்.

“நம்ம ஊருக்குள்ளே சாராய ஆலைய கட்டினதால விவசாய நிலம்தான் பாழாய்ப் போகுதுன்னு நினைச்ச நம்ம புள்ளைகள் எல்லம்  குடிச்சி பாழாப்போகப்போகுதே”  இதுக்கு ஒரு வழி பன்னனும் சராய ஆலையை ஊரவிட்டே அப்புறப்படுத்தனும் என்ன செய்யலாம் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் யோசித்துக்கொன்டிருந்தனர்.

அப்போது விவசாயிகளில் ஒருவரான குப்பன் “நம்ம ஊருல படிச்சவரு நம்மலுக்கெல்லாம் உதவி பன்றவரு நம்ம சோலைமலை அய்யாதான் அவருக்கிட்ட போயி சாராய ஆலைய மூடுறதுக்கு உதவி கேப்போம்” என்று சொல்ல, அனைவரும் சோலைமலை  வீட்டிற்க்கு சென்று “அய்யா அய்யா…” என்று கூப்பிட, “எல்லோரும் வாங்க” என்றவாறு  வீட்டிற்குள் இருந்து வெளியே வந்தார் சோலைமலை.

“என்ன எல்லாரும் ஒன்னா வந்துருக்கிங்க?” என்று அவர் கேட்க.,

“அமைச்சர் கூத்தரசன் ஏழைகளோட விவசாய நிலத்தை புடுங்கி அதில சாராய ஆலை கட்டுற வேலை நடக்குது அதை தடுத்து அவங்களை எல்லா ஊர விட்டே தொரத்தனும்”, என்றனர்  நிலத்தைப் பறிகொடுத்த விவசாயிகள்.

“நாளைக்கு எல்லாரும் வாங்க நேர அமைச்சர் கூத்தரசனையே நேர போய் பாப்போம்”
என்றார் சோலைமலை.

மறுநாள் ஊர்மக்கள் அனைவரோடும் சோலைமலை  அமைச்சர் கூத்தரசனின் வீட்டிற்கு செல்கின்றனர். அங்கு அமைச்சரின் பாதுகாவலர் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. அமைச்சரை பார்க்காமல்  போகமாட்டோம் என்று அனைவரும் கூக்குரல் எழுப்பிக் கொன்டிருந்தனர்.

“வெளியே என்னய்யா சத்தம்”, என்று அமைச்சர் கேட்க

“சராய ஆலையை  திறக்கக் கூடாதுன்னு ஊர்மக்களும் அந்த சோலைமலையும் பிரச்சனை பன்றாங்கன்னு”, அமைச்சரின் எடுபிடி சொல்ல., பிரச்சனையை பெரிதாக்கி விடக்கூடாது என்று என்னிய அமைச்சர் சோலைமலையை மட்டும் தனியாக அழைத்தார்.

“என்னய்யா சோலைமலை இந்த வக்கெத்த பயலுக சொல்றனுங்கன்னு நீயும் வந்துருக்கிறிய இது சரியா.

“உன்னோட வாழ்நாள்ள மொழிப்போர், இந்தி எதிர்ப்பு, விவசாயிங்களுக்காக போரட்டம்ன்னு முக்கால்வாசி வாழ்கைய இழந்திட்ட. மீதி நாளையாவது சந்தோசம வாழு. நான் உனக்கு எவ்வளவு பணம் வேணுன்னாலும் தர்றேன். நான் சொல்றத கேளு”, என்று அமைச்சர் சொல்ல

“உன் ஆசை வார்த்தைகளுக்கெல்லாம் நான் மயங்கமாட்டேன். உன்னை நம்பி ஓட்டு போட்டவங்களுக்கு இதுதான் நீ காட்டுற நன்றியா? சாராய ஆலையை நாங்க திறக்க விடமாட்டோம்”, என்று சொல்லிவிட்டு கோபமாக அமைச்சரின் வீட்டை விட்டு வெளியேறினார் சோலைமலை.

சாராய ஆலை பிரச்சனையில் இருந்து மக்களை திசை திருப்ப  அமைச்சர்  ஒரு முடிவெடுத்தார். ஆண்டுவிழா  தொடங்கியதும் தலைமையாசிரியர் சிறப்பு விருந்தினர்களான மாவட்ட கல்வி அதிகாரி, அமைச்சர் எல்லோரும் மேடையில் அமர்ந்திருந்தனர். ஒவ்வொரு போட்டியும் நடத்தப்பட்டன. அப்பொழுது “பேச்சுப் போட்டியில் அடுத்தபடியாக  ‘புறநானூற்றில் தமிழரின் கருனையும் வீரமும்’ என்ற தலைப்பில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் செழியன் பேசுவா்”, என்று ஒலிப்பெருக்கியில் அறிவிக்கப்பட்டது.

மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம் சொல்லி,

புறநானூறு எழுதப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் கடந்தாலும், பண்டைக் காலத்து வாழ்ந்த அரசர்களையும், வீரர்களையும், புலவர் பெருமக்களையும் போற்றிக் காட்டும் ஒரு வரலாற்றுப் பெட்டகம் புறநானூறு.  வீர வாழ்க்கை வாழ மனிதனுக்குக் கிடைத்த பொன்நெறிகள் நிறைந்தது.

சமுதாய உயர்விற்கான வழிகள் புறநானூற்றுப் பாடல்களில் புதையலாய்ப் பொதிந்து கிடக்கின்றன. உலகத்தை வாழவைத்துக்கொண்டிருக்கின்ற ஆக்கசக்தியான அன்பு, அறம், அருள், கொடை, ஈகை, கடமை, வீரம், தியாகம், முதலியன புறநானூற்றின் உயிர்ப்பொருளாய் உள்ளன.

எருமை அன்ன கருங்கல் இடைதோறும்
ஆனின் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனை நீயோ பெரும!
நீயோர் ஆகலின் நின் ஒன்று மொழிவல்,
அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயம் கொள்பவரொடு ஒன்றாது காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி
அளிதோ தானே அது பெறல் அருங்குரைத்தே.

எருமைகள் போல் தோற்றமளிக்கும் கரிய நிறமுடைய கற்கள் நிறைந்த இடமெல்லாம் மாடுகளைப் போலப் பரவியிருக்கும் யானைகள் நிறைந்த வலிமையான காடுகளைக் கொண்ட நாட்டை ஆளும் தலைவனே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here