சிறுகதைப் போட்டி – 31 : காதல் – பானுரேகா பாஸ்கர்

அது ஒரு பிரபலமான கலை அறிவியல் கல்லூரி நம் கதை மாந்தர்களான குரு,வருணா ,நளினி, அனைவரும் முதுநிலை வகுப்பில் பயின்று வந்தனர்.

தமிழ் மீது மாறாக் காதல் கொண்டிருந்தனர். படிப்பில் அனைவரும் சிறந்து விளங்கினாலும் வருணா முதல் மாணவியாக திகழ்தாள். வருணா அழகில் சுமாராக இருந்தாலும் அலை அலையாக சுருண்டு இடைவரைத் தொங்கிய அவள் கூந்தல் அனைவரையும் கவரும். குரு அவள் கூந்தலழில் மனதை பறி கொடுத்துவிட்டான்.

குரு வருணா நளினி மூவரும் ஒன்றாகவே இருப்பர் எப்போதும்., குரு வருணாவை காதலிப்பது அனைவரும் அறிந்த உண்மையாகி விட்டதால் குரு , கல்லூரிக்குள் நுழையும் போது வரு ,வரு என்று இரட்டை அர்த்தத்தில் நண்பர்கள் அவனை கிண்டல் செய்து வந்தனர்.

நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்த குரு எதை பற்றியும் கவலை கொள்ள வில்லை அவன் வருணாவை உயிராக நினைத்து நேசித்து வந்தான்.

வருணாவை தனிமையில் சந்தித்து பேசும் போதெல்லாம் அவள் கூந்தலை வருடிக் கொண்டே இருப்பான், பல புகைப்படங்கள் செல்போனில் எடுப்பான். அவளே கோபம் கொண்டு நீங்க என்னை லவ் பண்றீங்களா , என் கூந்தலை லவ் பண்றீங்களா என்றாள். சந்தேகமே இல்லை வருணா முதல்ல உன் கூந்தல் இரண்டாவது நீ என்றான்.

அவர்கள் காதல் விஷத்தை விட வேகமாக பரவியது குரு வீட்டிற்கும் வருணாவின் வீட்டிற்கும் தெரிந்தது சம்மதமும் கிட்டதட்ட கிடைத்த மாதிரி முடிந்து விட்டது.

ஆனந்தத்தின் எல்லையில் அவனும் அவளும் ஜோடிப் புறாக்கள் போல உலா வந்தனர்.
ஒரு நாள், வருணா கல்லூரிக்கு வரவில்லை உடல்நலம் சரியில்லை என்று நளினி சொன்னாள். அன்று மாலையே குரு சென்று பார்த்த போது ஜுரம் அதிகமாக இருப்பதால் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டது அறிந்து துடித்து போனான் குரு உடனே மருத்துவ மனைக்கு ஓடினான்,
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பது அறிந்து திகைத்தான்.

வருணாவின் அம்மா அழுது கொண்டே இருந்தார்கள். ஒரு வாரம் சென்று சற்று காய்ச்சல் குறைந்த பிறகு கல்லூரிக்கு வந்த வருணா யாரிடமும் பேசாமல் கல்லூரி முதல்வரைக் கண்டு மேல் சிகிச்சைக்காக கேரளா செல்வதால் ஒரு மாதம் விடுப்புக்காக விண்ணப்பம் கொடுத்து விட்டு நேராக சென்று விட்டாள்.

குரு திகைத்துப் போனான் என்ன ஆயிற்று வருணா சொல்லாமல் சென்று விட்டாளே என்று குழம்பி போன் செய்தால் அணைக்பட்டுள்ளதாக வந்தது,  அன்று மாலையே அவள் வீட்டிற்கு ஓடினான், வீடு பூட்டப்பட்டிருந்து ,அவர்கள் இரவுக்கிரவே காலி செய்து விட்டதாக உரிமையாளர் தெரிவித்தார்.

மறுநாள் முதல் அவள் கல்லூரிக்கு வரவேயில்லை நளினி அழுது அழுது முகம் வீங்கி காய்ச்சலால் படுத்து விட்டாள். குரு பித்து பிடித்தது போல் ஆனான். கல்வியில் சிறந்த இருவரும் , இப்போது மிகக் குறைந்த மதிப் பெண்களே எடுத்தனர். பல்கலைக் கழக முதல்மாணவனாக திகழ்வான் என்று எதிர்பாருகப்பட்ட குரு தேறியதே பெரிய விஷயம் போல் தேர்வு பெற்றான்.

காதலியை பற்றிய கவிதைகள் எழுதுவது முகநூலில் போடுவது , எந்த நேரமும் வருணா என்று பெயரைப் போட்டு முக நூலில் தேடுவது என்று பொழுதை போக்கினான்.
அவன் கவிதைகளை வருணா படிக்கிறாளா என்று தவித்தான் . ஒரு அடையாளமும் இல்லாமல் மறைந்த தன் காதலியை எண்ணி பித்தனானான்.

அப்போது எதிர்பாராத விதமாக அவன் தந்தை மறைந்து விட்டதால் தொழிலை கவனிக்க வேண்டியதாயிற்று, காலம் காலம் செல்ல செல்ல தொழிலில் கவனம் செலுத்தி தன் தங்கை திருமணம் தாயின் பொறுப்பு அனைத்தையும் செவ்வனே கவனித்தான். திருமணம் செய்து கொள்ள அவன் தாய் வற்புறுத்தியும் ஒத்துக் கொள்ளவில்லை.

இரண்டு ஆண்டுகள் ஓடி விட அவன் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது.

சில ஆண்டுகளுக்கு பின்,
அந்த அழகிய வீட்டில் அப்பா என அழைத்துக் கொண்டே ஒரு ஐந்து வயதுக் குழந்தை ஓடி வந்தது .
பாட்டியின் மடியிலிருந்து காரை விட்டு குதித்து அப்பா என ஓடினாள்.

தோட்டத்தில் அமர்ந்திருந்தவன் வருணாக் குட்டி பார்த்து வாங்க என்று குழந்தையை அணைத்து கொஞ்சி மகிழ்ந்தான் குரு.

அப்பா இன்னிக்கு எங்க மிஸ் நீங்க பெரியவங்களா ஆகி என்ன ஆகப் போறீங்க என்று கேட்டாங்க.,

நான் என்ன சொன்னேன் சொல்லுங்க என்றாள்.

நீங்க டாக்டர் னு சொன்னீங்களா செல்லம் என்று குரு வருணாவின் தந்தை கேட்டான்.

இல்ல அப்பா கலெக்டர் னு சொன்னேன், என்று கை கொட்டி சிரித்தாள் வருணா.

திடுக்கிட்ட குரு கண்கலங்கினான் . அந்த பாவிக்கும் இதே லட்சியம் தானே சண்டாளி என்று கண்ணீர் விட்டு அழுதான்.

ஏன் அப்பா அழறீங்க?

உங்க மம்மிக்கும் இதே லட்சியம் மா அதான் அழுதேன்.

மம்மி எப்ப வருவாங்க டாடி?

கலெக்டர் படிச்சி முடிச்சிட்டு வருவாங்கம்மா என்று வாய்க்கு வந்ததை உளறினான்.

வரு நீ உள்ள போடா செல்லம் என்று அவளை அனுப்பி விட்டு, குரு உன்ககு என்ன பைத்தியமா குழந்தை கிட்ட ஏன் அப்படி பேசின? அவளுக்காகவாது ஒரு கல்யாணம் பண்ணிக்குவனு பார்த்தா கலெக்டருக்கு படிக்க போய் இருக்காங்கனு பொய் சொல்றியே குழந்தை கிட்ட யாரு வரப் போறாங்க என்று கேட்டாள் குருவின் தாய் சீதா.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here