சிறுகதைப் போட்டி – 16 : கெடுநரும் உளரோ? – கா. விசயநரசிம்மன்

”வசந்த், எழுந்திரி, அவசரமா கிளம்பனும்…” கன்சோல் மீது சாய்ந்தபடி தூங்கிக்கொண்டிருந்த வசந்தை ர.ரா லேசாகக் காலால் உதைத்தான்.

”தூக்கத்துல எழுப்புறது பெரிய பாவம் பாஸ்! பைவ் கிரேட் சின்ஸ் கேள்விப்பட்டிருக்கீங்களா?” வசந்த் கண்களைக் கசக்கிக்கொண்டு கன்சோலில் எதையோ தேடினான்.

“லேப்ல தூங்குறவனுக்கு என்ன நரகம்னு தெரியும்! எழுந்து கிளம்பு, முக்கியமான மீட்டிங் போனும்!”

“அவ்ளோ அர்ஜெண்ட்டா?”

“அர்ஜெண்ட் அண்ட் இம்பார்ட்டண்ட், எழுந்திரி டா!”

“நான் ரெடி பாஸ்!” வசந்த் முகத்தைக் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டு தலையை ஒரு முறை கலைத்துவிட்டுக் கொண்டான்.

ர.ரா. கழுத்துப்பட்டை கட்டியிருப்பதை அப்போதுதான் கவனித்தான், “என்ன பாஸ், இவ்ளோ பார்மல், அப்டி எங்க போறோம்?”

“அதிபரைச் சந்திக்க!”

———-

“மேடம், கோச்சுக்காம முதலேர்ந்து ஒரு வாட்டி நிதானமா தெளிவாச் சொல்லுங்க, என் பாஸ்கு என் அளவுக்கு டக்குனு புரியாது”

ர.ரா வசந்தை முறைத்துவிட்டு அதிபரை நோக்கினான். அதிபர் வடக்கத்திய பெண்மணி, ஒப்பனையை எல்லாம் கழித்துவிட்டுப் பார்த்தாலும் நாற்பது வயதுக்குக் குறைவானவர்தான். பத்திரிகை தொலைக்காட்சி படங்களில் பார்ப்பதைவிட நேரில் சற்று வித்தியாசமாய் இருந்தார். ‘அதெல்லாம் பழைய ஃபூட்டேஜ் பாஸ்’ என்று கிசுகிசுத்த வசந்தை முறைத்து அமைதியாக்கினான்.

அதிபர் தன் தோழியின் அருகில் இன்னும் நெருங்கி அமர்ந்துகொண்டு, அவள் தோளில் இருந்த தன் கையை இன்னும் இறுக்கியபடி, அவளைப் பேசப் பணித்தார். அந்தப் பெண்ணின் கணவனைக் காணவில்லை என்பதுவரை தெளிவாகப் புரிந்தது இருவருக்கும்.

“எனக்கு எப்டி சொல்றதுனே தெரியல சார்! காலைலேர்ந்து ஷியாமைக் காணும், வீட்டைவிட்டு வெளில போகல, கதவுல எக்சிட் ரெஜிஸ்டர் ஆகல! படுக்கையறையை விட்டே வெளில போனாமாதிரி தெரியல! எப்பவுமே ஷியாம் எழுந்திரிக்கும்போது எங்க ஞமலும் கூடவே எழுந்திருச்சுரும், இன்னிக்கு நா வந்து பார்த்தப்ப அது படுக்கைக்கு அடில தூங்கிட்டுதான் இருந்துச்சு…”

”வவ்வ்” ஞமல் என்று பெயரிய அந்த நாய் அவள் சொல்வதற்குச் சாட்சி போல ஒருமுறை குரைத்தது.

“ஸ்கூல்ல எங்க மிஸ் சொன்ன விக்ரமாதித்யன் கதை மாதிரியே இருக்கே பாஸ், ஷியாம் எப்படி ரூமுக்குள்ளயே காணமப் போயிருப்பார்?” வசந்த் உண்மையாகவே வியப்பில் இருந்தான்.

“ஷட் அப் வசந்த்! மேடம், நீங்க நல்லாத் தேடிப் பார்த்தீங்களா? நீங்க போடுற காப்பிக்குப் பயந்துட்டு கப்போர்டுகுள்ள ஒளிஞ்சுட்டு இருக்கப் போறாரு?” ர.ரா சிரிக்காமலே கேட்டான்.

“இதுக்கு நானே பரவால்ல பாஸ்!”

”புரொபசர்ஸ், ப்ளீஸ், கொஞ்சம் சீரியசா இருங்க, இது ஜோக் இல்ல, என் தோழி ரொம்ப கலங்கிப் போயிருக்கா!” அதிபர் சற்றே கடுப்பாகியிருந்தார்.

“புரியுது, ஆனா இதுல நாங்க என்ன பண்ணனும், அதான் புரியல!” என்றான் ர.ரா.

“அத இவர்தான் சொல்லனும், இவர்தான் உங்கள சஜஸ்ட் பண்ணார்!” என்று சற்றே எரிச்சலோடு அருகில் இருந்தவரைக் கைக்காட்டினார் அதிபர்.

“டாக்டர் ரங்கராஜன், என்ன உங்களுக்குத் தெரியும்னு நினைக்குறேன்” என்று முன் வந்து கைக்கொடுத்தார் அந்த அதிகாரி.

“நல்லா, இந்நாட்டின் அறிவியல் ஆலோசகர், நான் வேலை செய்யும் பல்கலையின் முன்னால் இயக்குநர்…” ர.ராவும் கைக்குலுக்கினான்.

“நல்லது! இது போலிஸ் விசாரிக்க வேண்டிய கேஸா எனக்குத் தோனல, அதான் உங்களைக் கூப்பிட்டேன்! போலிஸும் மிலிட்ரியும் தங்களால முடிஞ்சவரை துழாவிட்டாங்க, மிஸஸ். ஷியாம் சொல்ற மாதிரி மிஸ்டர். ஷியாம் அவங்க படுக்கையறையை விட்டே வெளில போகல, அறைக்குள்ளயே காணாம போயிட்டார், எப்படினுதான் யாருக்கும் புரியல! ஹி ஜஸ்ட் வேனிஷ்ட் இன் டு தின் ஏர்!” என்று தோள்களைக் குலுக்கினார் அவர்.

”இண்ட்ரஸ்டிங்… என்ன சொல்ற வசந்த்?”

“எதாச்சு நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி ஆளக் கடத்தியிருப்பாங்களோ?”

“இருக்கலாம், மிஸ்டர். ஷியாம் அரசின் தகவல் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் துறைல முக்கியமான பதவில இருக்குறவர், நீங்க சொன்ன அதே சந்தேகம்தான் எனக்கும், அதான் உங்கள இங்க வரவழச்சேன்” அறிவியல் ஆலோசகர் வசந்தை நோக்கிப் புன்னகைத்தார்.

”ஆனா இந்த வீட்டுக்குள்ளேர்ந்து ஒரு ஆளைக் கடத்துறது அவ்ளோ சுலபமில்ல, இங்க நிறைய செக்யூரிட்டி அம்சங்கள் பொருத்தியிருக்கோம்…” மிஸஸ். ஷியாம் கேவல்களுக்கூடே பேசினாள், அதிபர் அவளது முதுகைத் தடவிக்கொடுத்து சமாதானப்படுத்த முயன்றார்.

“ஆமா டாக்டர். ரங்கராஜன், மிஸ்டர். ஷியாம் எங்களுக்கு மிக முக்கியம், அது மட்டுமில்லாம இவ என் நெருங்கின தோழி, தங்கை மாதிரி, எனக்காக நீங்க கொஞ்சம் தீவிரமா இதை எடுத்துக்குங்க, எந்த உதவினாலும் செய்து தரேன்…”

“அறிவியல் துறைக்கு ஒரு கிராண்ட் அப்ளை-”

“வசந்த்!” அவன் முடிப்பதற்குள் ர.ரா அவனை தடுத்து முறைத்தான், “எங்களுக்கும் இன்னும் ஒன்னும் புரியல மேடம், பட், நாங்க என்னனு பாக்குறோம்!”

“குட்!”

“வசந்த, நீ போய் இங்க என்னென்ன செக்யூரிட்டி மாட்யூல்ஸ் இருக்குனு தெரிஞ்சுக்கோ, எல்லாம் ஒழுங்கா வேலை செய்யுதானும் பார்த்துடு, நான் நி.நா-வை வரச் சொல்றேன்…” ர.ரா தன் மணிக்கட்டில் இருந்த கடிகாரம்+தொலைப்பேசியை இயக்கினான்.

“ஏன் பாஸ், நி.நா-வை நான் வரச் சொல்ல மாட்டேனா?”

”வசந்த்!”

“சரி சரி… நான் கிளம்பிட்டேன்!”

———–

”எல்லாம் அப்டி அப்டியே இருக்கு பாஸ்! ஆள் மட்டும் காணமப் போயிட்டான், வொலட்டைல் மெமரில டேட்டா மாதிரி, புஸ்!”’

வசந்தும் ர.ரா-வும் ஷியாமின் படுக்கையறையில் இருந்தார்கள்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here