சிறுகதைப் போட்டி – 15 : கேட்டதும் காதல் – வி. கங்கா மோகன்

கதிரவன் சற்றே கண் விழித்து காரிருளை அகற்றும் தருணத்தில் கொஞ்சம் இருட்டு கொஞ்சம் வெளிச்சம் எனத் தோன்றும் அதிகாலை வேளையது. நீண்ட நெடுஞ்சாலையில் வாகனங்களின் ஒளிக்கு இடையில் நெடுந்தூரத்தில் ஓர் உருவம். வயதில் முதுமையும் நடையில் இளமையும் ஒருசேரக் கொண்ட அவரின் ஒரு கையில் தூக்குச்சட்டியும், மறுகையில் ரொட்டி பாக்கெட்டுடன் நடந்து வர, “என்ன இன்னைக்கு சீக்கிரமாவே டீ வாங்கிட்டு போறீங்க” என்று கேட்ட நண்பரிடம் “ஆமாங்க என்னோட சின்னப் பொண்ணுக்குப் பரிச்சை அதான்” என்று சொல்லிக்கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் ராஜ். வீட்டிற்கு வந்து டீ ரொட்டி இரண்டையும் தன் இளைய மகள் தமயந்தி இடம் குடுத்து, “இத குடிச்சிட்டு படிமா” என்றார் ராஜ். தமயந்தி இவள்தான் குடும்பத்தின் கடைக்குட்டி, அப்பாவின் செல்லமகள். ஓங்கி வளர்ந்த பனைமரம் என்று சொல்லும் அளவுக்கு சற்றே உயரமானவள். ஒல்லியான உருவம், பேச்சிலே எல்லோரையும் கவருபவள், அந்த பேச்சிலே நல்ல சிந்தனையும், தெளிவும், கம்பீரமும் நிரம்பியிருக்கும். இப்படி புறஅழகைக் காட்டிலும் அகத்தின் அழகிலே கர்வம் கொண்டவள்.

இவளுக்கு ஒரு அண்ணன் மற்றும் ஒரு அக்கா, அண்ணனுக்கு கம்ப்யூட்டர் சென்டரில் வேலை,  அக்காவுக்கு மருத்துவமனையில் லேப் டெக்னீஷன் வேலை. இவளது அம்மா தான் குடும்பத்தின் ஆணி வேர். ராஜ்ஜிற்கு தன் மகனை விட தன் மகள்கள் இருவரும் தான் மிகவும் செல்லம். எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார், “என்னோட பொண்ணுங்க ரெண்டும் எனக்கு என்னோட கண்ணுங்க மாறினு”. இப்படிப்பட்ட குடும்பச்சூழலில் தமயந்தி மிகவும் சந்தோஷமாகவே தன் கல்லூரி படிப்பான எம்.சி.ஏ வை தொடர்ந்தாள்.
திடீரென்டு ஒருநாள், “ஓ…”வென்ற அழுகுரல்…. “எங்களை எல்லாம் இப்படி விட்டு போய்ட்டிங்களே நான் என்ன செய்ய”  என்று ஓங்கி ஒலித்தக் குரலையும் அறியாமல் சற்றே நின்று யோசித்தபடி சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் திகைத்து நின்றாள் தமயந்தி. “இந்த பிள்ளைகளை எப்படி கரை சேர்க்கபோறேனு தெரியலியே” என்று தாயின் அலறல் சத்தம் கேட்டு கொஞ்சம் கொஞ்சமாய் சுய நினைவுக்கு வந்தாள் தமயந்தி. ஆம் நேற்று இரவு நடந்து மருத்துவமனை போன தன் தந்தை இன்று பிணமாக வீடு திரும்ப ஒன்றுமே புரியவில்லை தமயந்திக்கு. “திடீர்னு நெஞ்சு வலியாம் அதான் இறந்து போயிட்டாரு பாவம்” என்று எல்லோரும் புலம்ப “அப்பா… அப்பா…” எனத் தேம்பி தேம்பி அழத் தொடங்கினாள் தமயந்தி. அப்பாவின் மறைவை அடுத்து குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவளும் இவளே…
நிலைகுலைந்த குடும்பத்தைத் தமயந்தியின் அம்மா தூக்கிநிறுத்த நாட்கள் நகரத் தொடங்கின… அம்மா இட்லி மாவு பேக்கிங் பண்ணிக் குடுக்க அதைக் கடைகளுக்கு போட்டுவிட்டு கல்லூரிக்கு போவாள் தமயந்தி, ஆமாம் படித்துக்கொண்டே குடும்பப் பாரத்தைச் சற்றே இவளும் சுமந்தாள். வறுமையிலும் மேல்படிப்பு படிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் கஷ்டப்பட்டுப் படித்து முடித்தாள்.
“படித்து முடித்துவிட்டோம் அடுத்தது” என்ன என்று யோசித்துக்கொண்டிருந்த தமயந்திக்கு “அப்பா இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன் என்னனே தெரியல என் கையை அழுத்திப் பிடித்து கலங்கினாரு, ‘ஒருவேளை குடும்பத்தை பாத்துக்கோனு சொல்ல வந்தாரோ’ என்றெல்லாம் அவள் மனதில் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது. எது எப்படியோ அப்பாவின் இடத்தில் இருந்து இந்த குடும்பத்தை நான் தான் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தாள். அதற்கு உடனே நல்ல வேலை தேட வேண்டுமென்று தன் சொந்த ஊரை விட்டு சென்னை புறப்படத் தயாரானாள்.
“சென்னை போய் ப்ரெண்ட்ஸ் கூட ஹாஸ்டல்ல இருந்துகிட்டே வேலை தேடுறேன்மா” என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு சென்னைக்குக் கிளம்பினாள். படித்த படிப்புக்கு வேலைக் கிடைக்காமல் தெருத் தெருவாக தேடி அலைந்தாள். ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்கினாள். நாட்கள் உருண்டோடின. அவள் பட்ட கஷ்டத்தின் பலனாய் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலையும் கிடைத்தது.
“அம்மாகிட்டதான் முதல்ல  சொல்லணுடி” என்று தன் தோழியிடம் சொல்லிவிட்டு அம்மாவுக்கு போன் செய்தாள். “அம்மா… எனக்கு வேலை கிடைச்சுடுச்சு கம்ப்யூட்டர் என்ஜினீயர் வேல மாசம் 14 ஆயிரம் சம்பளம்” என்று ஒரே சந்தோஷத்தில் பேச்சைத் தொடர அவள் அம்மாவோ “வேலை கிடைச்சாதா ஊருக்கு வருவேன்னு சொன்னியேமா இப்போவாச்சு வாயேமா” என்று ஏக்கத்துடன் கேட்டாள். “இல்லமா… முதல் மாச சம்பளம் வாங்கிட்டு வரேன்” என்று வலுவில்லாத குரலில் சொல்லி மனமில்லாமல் போனை துண்டிக்கவே அழுகை முட்டியது தமயந்திக்கு. அவளது தோழிகளிடம் ஆறுதல் வார்த்தைகளை வாங்கி மனதை தேற்றிக்கொண்டாள்.
“பஸ்ட்டே ஆபீஸ்டி பயமா இருக்கு நான் சீக்கிரமா போறேன் பாய் டி” என்று கூறியபடி ரூம்க்கு வெளியே விரைந்தாள். “ஹேய் ஆல் தி பெஸ்ட் டி” என்ற தோழிகள் வாழ்த்த, திடீரென மின்னல் வந்தது போல அவளின் முத்து பற்கள் தெரிய முகம் முழுவதும் புன்னகைப்பூ பூக்க விடைப்பெற்று வெளியேறினாள்.
பதட்டத்துடன் ஆபீஸில் நுழைந்து “சார்… நா.. தமயந்தி” என்று தயக்கத்துடன் மேனேஜரை பார்த்து சொல்ல, “ஓ… வெல்கம்” என்றபடி அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். தனக்கென்று ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு அழைத்துச் சென்று “சிட் ஹியர், ஒன் பர்சன் வில் கால் யு பிரம் டெல்லி, ஹிஸ் நேம் இஸ் யுகன்” என்று சொல்லிவிட்டு சென்றார் மேனேஜர். தமயந்திக்கோ பயம் அதிகமாகிவிட்டது “யுகனா… யாரு அவர் என்ன சொல்லப்போறாரோ” என்று தனக்குள்ளே பேசிக்கொண்டு இருக்கவே, அபாய மணி போல போன் அடிக்க ஆரம்பித்தது. இந்த அபாயமணிதான் அவளின் வாழ்வையே புரட்டிப்போட போகிறது  என்று அவளுக்கு அப்போது தெரியவில்லை.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here