சிறுகதைப் போட்டி – 28 : வாலிழை மகளிர் – மா.மணிகண்டன்

நாற்காலியில்  அமர்ந்து கொண்டு அழுதுக் கொண்டிருந்தாள் இளமதி. இரு வயது பேதைக்கு பருப்பு மசித்த சோற்றை ஊட்டிக் கொண்டும் இளந்தத்தனை நினைத்துக் கொண்டும் அவனது முகத்தை திருமண நாள் புகைப்படத் தொகுப்பில் பார்த்துக் கொண்டே ஒளிக்காட்சி தட்டு இயக்கியை எழுந்து சென்று இயக்கத் தொடங்கினாள். ஆயுள் சிறைத் தண்டனை பெற்றிருக்கிறது அந்த ஒளிக்காட்சித் தட்டு. அதற்கு விடுதலையே இல்லை. அதன் விடுதலை இளந்தத்தனின் வரவை பொறுத்தது இல்லை இளமதியின் மாற்றத்தைப் பொறுத்தது.

 ஒளிகாட்சி இயக்கியை இயக்கியதுமே இளமதி அகங்மகிழ்ந்து பின்னர் கண்ணீர் மழைக் கொட்டுவாள்.

இளந்தத்தன், பார்த்து இரசிக்க இயலாத ஒரு முகம். எங்கு சென்றாலும் அவனுக்கு முன்னே செல்லும் தொப்பை, சிரித்தால் தெளிவாய் தெரியும் கறைப் படிந்த பற்கள்முன்னுக்கு பின் பின்னுக்கு முன் முரணான தேகம், வெண்குழல் வத்தி பிடித்து பிடித்தே கருத்த உதடுகள், இளந்தத்தனுக்கும் இளமதிக்கும் திருமணம் நடந்து ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகள் கழிந்துவிட்டது.

இளமதி, பெயருக்கேற்ற வண்ணம், மென்காந்தள் மேனியாள், பேச்சுக்குரலோ நவீன மீயாழ் ஒலிக்கொள்ளும், குரவை மீனின் கண்கள், வெண்வாகை தூரிகை இமைகள், செம்மருதப்பூவின் இதழ்கள், நொச்சிக்கிளை இடை, சிரித்தால் சிந்தும் நித்திலக்கோவை, மொழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சு போட்டு வைத்தது இளமதியின் வறுமை.

ஒளிக்காட்சித் தட்டு இயங்கியது. சாதிப்பெயர் பதித்து இன்ன சாதிக் கோட்டையில் மணவிழா என்ற விளம்பரப் பாதைகையோடு  கூடிய பாடலோடு இளந்தத்தனின் தந்தையும் தாயும் காட்சியளித்தார்கள். பின்னே இளந்தத்தனின் நண்பர்கள் பல்வேறு குழுக்களாய் ஆளுக்கொரு நடிகர் பெயரை அடைமொழியாய் வைத்து கொண்டு வலம் வந்தார்கள் திருமண சோடிகள் பல்வேறு கோணங்களில் பல்வேறு நாடுகளில் பல்வேறு மலைகள் ஆறுகளுக்கு மேலே ஆகாயத்துக்கு மேலே வலம் வந்த வண்ணம் இருந்தார்கள்.

சுப நிகழ்ச்சிகளுக்கு இராசு ஒளிப்பதிவு என்ற வாசகத்தோடு கூடிய தொலைப்பேசி எண்ணும் வலம் வந்தது.

” மறுமகளே மறுமகளே வா வா

உன் வலது காலை எடுத்து வைத்து வா வா”

பாடல் ஒலித்ததும் புகுந்த வீட்டில் தீபம் ஏற்றியதை பார்த்து இரசித்து விட்டு ஒளிக்காட்சி தட்டு இயக்கியை அணைத்து விட்டு கையிலேயே உறங்கிய பிள்ளையை தொட்டிலில் போட்டு விட்டு படுக்கைக்கு சென்றாள்.உறக்கம் வராது கண்ணீர் வந்து கொண்டிருந்ததை சாளரம் வழியே மதியை மதி எட்டி பார்த்து கடந்து சென்றது.

குளிர்ந்த காற்று மேனியை தைவரல் செய்து சென்ற தருணம் இளந்தத்தனும் அவளும் அற்றை திங்கள் அல்லில் நடந்தனவற்றை நினைவுக்கூர்ந்தாள். மாப்பிள்ளை மனசுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கோ அன்னை அறிவுரை மனதில் நிறுத்திக்கொண்டு. தோழிமார்களின் குறிப்புகளை நெஞ்சுக்குள் குறித்து வைத்துக்கொண்டும் பேரிளம் பெண்ணொருத்தியின் அனுபவத்தை காதின் வழி கேட்டுக் கொண்டும் அறைக்குள் நுழைந்தாள் அரிவை பால் சொம்போடு.

காலில் விழுந்து அவன் தொட்டு தூக்குவதற்குள் தானே எழுந்து மெத்தை மீது அமர்ந்தவளை பார்த்து கேட்டான் முதல் கேள்வி உனக்கு முன்னனுபவம் ஏதும் இருக்கா இது எத்தனையாவது முறை, சரி எப்போமே பால் தான் கொண்டு வரனுமா, ஒரு மாறுதலுக்காக  சாரயம் கொண்டு வந்தால் தான் என்ன ச்சே என சலித்து கொண்டே கையிருப்பில் வைத்திருந்த மதுவை அருந்த நீங்க குடிப்பீங்களா என்றாள் இளமதி. ஆமான்டி குடிக்காம அணைக்காம என் பொழுது விடியாது அடையாது. இன்னைக்கு நீதான்டி நான் தொட்டுக் கொள்ள ஊறுகாய் என்று சொல்லிக்கொண்டே மதுவை குடித்து விட்டு மாதுவை சட்டென்று அணைத்தான். திமிலை பிடித்தால் திமிறும் காளையைப் போல திமிறியது.திணறியது ஆநிரை.

குடித்த வாயோடு முத்திக்கொண்டே புணர்ந்தான். பத்தே நிமிடத்தில் அவனது தேகத்தின் தேவையை மட்டும் முடித்து விட்டு குடித்த போதையில் உறங்கிவிட்டான். கண்ணீர் வடிந்தது கண்களில் செந்நீர் வடிந்தது அவளது பெண்மையில். அவளுக்கு இதுவே முதல் இரவு முதல் அனுபவம் முதல் கன்னி கலைப்பு நிகழ்வு.

சாளரம் வழியே தெரிந்த நிலவை மேகம் மறைத்துக்கொண்டு இழுத்துச் சென்றது.குழைந்தை அழுகை  சத்தம் நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது.தொட்டிலை ஆட்டி விட்டு எண்ணி கொண்டிருந்தாள். அனுசரித்து போயிருந்தால் தன்னோடு இருந்திருப்பாரோ,திருமணத்திற்கு பிறகேனும் திருந்திருப்பாரோ,இந்நேரம் அந்த சிரிக்கியிடம் குடித்த வாயோடு சீண்டிக் கொண்டிருப்பாரோ ச்சீ ச்சே என்னமும் செய்துவிட்டு போகட்டும் தனக்குத்தானே சமாதானம் செய்துக் கொண்டாள். திரும்ப வந்தால் திரும்பி கூட பார்க்க கூடாது நிழல் கூட அவர் மேல் படக்கூடாது சபதம் ஏற்றுக்கொண்டத் தருணம் மழைப்பொழிந்து கொண்டிருக்க ஆகாசவாணி ஒலித்தது. இளந்தத்தன் திரும்பி வந்தால் ஏற்றுக்கொள்வாயா. பதில் ஏதும் சொல்லாது உறங்க தொடங்குகையில் கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்து தாழ் திறந்தாள் இளந்தத்தன் அழிந்த தேகத்தோடும் கிழிந்த சட்டையோடும் நின்றுக்கொண்டிருந்தான். முந்தானை எடுத்து தலை துடைத்து.ஆகாசவாணி கேள்விக்கு செய்கையால் பதிலளித்தால் இளமதி.ஒளிக்காட்சி தட்டுக்கு இன்று விடுதலை

த சட்டையோடும் நின்றுக்கொண்டிருந்தான். முந்தானை எடுத்து தலை துடைத்து.ஆகாசவாணி கேள்விக்கு செய்கையால் பதிலளித்தால் இளமதி.ஒளிக்காட்சி தட்டுக்கு இன்று விடுதலை.

 

குறிப்பு

குறுந்தொகைப்பாடல் 45

ஆலங்குடி வங்கனார்

காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி
வாலிழை மகளிர்த் தழீஇய சென்ற
மல்ல லூரன் எல்லினன் பெரிதென
மறுவருஞ் சிறுவன் தாயே
தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here