சிறுகதைப் போட்டி – 38 : வரி எதிர்த்த வரிகள்! – ப்ரணா

வெயில் சுட்டெரித்துக்கொண்டிருக்கும் நண்பகல் நேரம். பிசிராந்தையார், அந்த நகரின் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். மனத்தில் சோழ மன்னனும், தான் காணாமலேயே நட்பு பூண்டுள்ள நண்பனுமான கோப்பெருஞ்சோழனை பற்றிய நினைவுகளில் திளைத்தபடியே வந்து கொண்டிருந்தார்.

வெயிற் சூடு ஏற ஏற எங்காவது இளைப்பாற எண்ணியவர் ஒரு அரச மரத்தடியில் ஒதுங்கினார்.

“சாமி! மோர் சாப்பிடுறீங்களா?” மரத்தடியில் அமர்ந்திருந்த அந்த மூதாட்டியின் குரல் அவரை அழைத்தது.

“எங்காவது நீர் அருந்தலாம் என்றெண்ணி நின்ற எனக்கு மோரே கிடைக்கிறதென்றால் விடுவேனா?” என்று சிரித்தபடியே அதற்குரிய காசுகளைக் கொடுத்தார்.

மண்பாண்ட குடுவையில் இருந்த மோரை ஒரு கோப்பையில் ஊற்றி அந்த மூதாட்டி நீட்டினார்.

“தாயே! நான் இந்த வழியில் பலமுறை சென்றுள்ளேன்; ஆனால் உங்களை இங்கு கண்டதில்லையே? தாங்கள் யார்?” என வினவினார்

“நாதியற்றவள் சாமி!” என்ற அந்த மூதாட்டியின் பதில் பிசிராந்தையாருக்குள் இடியென இறங்கியது.

“என்ன தாயே, இப்படி சொல்லிவிட்டீர்கள்; நீங்கள் சொன்ன ‘நாதியற்றவள்’ என்ற சொல் மட்டும் மன்னன் பாண்டியன் அறிவுடை நம்பி காதுக்குச் சென்றால், துடித்துவிடமாட்டரோ?

“மன்னனுக்கு ஏது சாமி என்னைப்போன்ற வறியவர்களை நினைக்க நேரம்; நாங்கள் கொடுக்கும் வரி அவர்களை சென்ற அடைய வேண்டும்; அது மட்டும் தானே அவர்களின் நோக்கம்”

‘வறியவர்களை’, ‘வரி அவர்களை’ என்ற அந்த மூதாட்டியின் வார்த்தை சிலேடை பிசிராந்தையாரை மிகவும் கவர்ந்தது. ‘தமிழே என்னே உன் அருமை!’ என மனதுக்குள் மெச்சியவர்,

“என்ன தாயே செய்வது, அரசாங்கத்தை நடத்த வேண்டாமா? அதற்கு வரி அவசியம் தானே?” என்று எதிர் கேள்வி கேட்டார்.

“மக்களை துன்புறுத்தி வரியை வசூல் செஞ்சு, அவங்களை வாழவிடாம பண்ணிட்டு, யாருக்கு சாமி அரசாங்கத்தை நடத்தப்போறாங்க?”

மூதாட்டியின் கேள்வியில் அர்த்த அடர்த்தி மட்டுமன்றி ஒரு சுய வலியும் இருப்பதை உணர்ந்த பிசிராந்தையார்,

“ஏது விட்டால் வரி விதிப்புக்கு எதிராய் ஒரு பெரிய கலகமே செய்துவிடுவீர்கள் போல” எனச் சிரித்தார்.

“அதுக்கெல்லாம் வலு ஏது சாமி, சொன்னது கேட்டுக்கணும், காசு கொடு-னா கொடுக்கணும் இருக்கறதை வெச்சு வாழ்ந்துட்டு போய் சேர்ந்திடணும் அது தானே எங்களை மாதிரி ஏழைகளுக்கு எழுதி வெச்சிருக்கு.”

இந்த விரக்தியான வார்த்தைகளுக்குப் பின்னால் மறைந்துள்ள ஒரு சோகத்தை ஊகிக்க முடிந்ததே ஒழிய, பிசிராந்தையாரால், அது இன்னது தான் என உணர முடியவில்லை.

“அப்படி என்னதான் உங்களுக்கு சோகம்?” என்று நேரடியாகவே விஷயத்திற்கு வந்தார்.

“என்னத்த சாமி சொல்றது! என் கணவரும் நானும், ஊர் ஒதுக்குப்புறத்துல ஒரு காணி நிலத்தை வெச்சு விவசாயம் பார்த்து வயிறு வளர்த்தோம். எங்களுக்கு ஒரு மகனும் பொறந்தான்; அங்கனையே தான் எங்க பொறப்பு, பொழப்பு, வாழ்வு, தாழ்வு எல்லாம். சில ஆண்டுக்கு முன்னால, என் கணவரு கண்ண மூடிட்டாரு; என் பையனோ இளவயசுக்காரன். அவனுக்கு படிக்க ஆச, ஒண்டி கட்டையா என்னால முன்ன மாதிரி விவசாயம் பார்க்க முடியல, இதைச் சொன்னா ஊர் தலைவருங்க கேட்கனுமே….”

“என்னாச்சு?”

‘நில வரி முன்ன மாதிரி கொடுத்தே ஆகணும்-னு சொல்லிட்டாங்க’; வருமானமே இல்ல நான் எங்கத்த வரியை கட்டுறது. அதனால் ரெண்டு நாளுக்கு முன்ன அரண்மனையிலேர்ந்து காவலர்களெல்லாம் வந்தாங்க;

“முன்ன வந்த அளவுக்கு வருமானம் இல்ல; கொஞ்ச குறைக்கச்சொல்லி நான் அவுங்க காலை புடிச்சு கெஞ்சவும், என்னைய எட்டி உதைச்சுட்டாங்க; இதப் பார்த்த என் மவன் அவுங்க கூட சண்டை பிடிக்கவும், கைது செஞ்சு கூட்டிப் போயிட்டாங்க; என் தலைவிதி நான் என் மவன் எப்ப வருவான்-னு தெரியாம வீட்டுல சும்மா இருக்கவும் முடியாம, இங்கன மோர் வித்து வயித்த கழுவிகிட்டிருக்கேன்” என்று முழுகதையும் சொல்லி முடிக்கும் போதே மூதாட்டியின் கண்கள் பொல பொலவென கண்ணீர் சிந்த ஆரம்பித்து விட்டது.

தனது புடவையின் தலைப்பால் கண்களை துடைத்துக் கொண்டு தொடர்ந்தாள்,

“நான் ஒரு கிறுக்கி இப்படித்தான் பொழுதன்னிக்கும் வரவங்க போறவங்க கிட்ட புலம்பிகிட்டு இருக்கேன். உங்களால, என் புலம்பலை கேட்க முடியுமே தவிர வேறென்ன பெரிசா செஞ்சிட முடியும்?” என்றாள்.

வேறென்ன பெரிசா செஞ்சிட முடியும்? என்ற வார்த்தைகள் பிசிராந்தையாரை வெகுவாக பாதித்தது.

‘நான் நிச்சயம் ஏதாவது செய்வேன்’ என முணுமுணுத்தவர், நேரே கிளம்பி அரண்மனை நோக்கி நடந்தார்.

“மன்னா! தங்களைக் காண புலவர் பிசிராந்தையார் வந்துள்ளார்!” வாயிற் சேவகன் அரசவையில் வந்து மன்னனிடம் தெரிவித்தான்.

“உள்ளே வரச்சொல்!” என்றான் பாண்டியன் அறிவுடை நம்பி.

பிசிராந்தையார் உள்ளே வரவும் எழுந்து சென்று அவரை ஒரு இருக்கையில் அமர வைத்த பின்பு, மன்னனும் தனது அரியணையில் அமர்ந்தான்.

“மன்னா! எல்லாம் நலமா?” என்றார் பிசிராந்தையார்

“நலம் தான் புலவரே!”

“அப்படியா?” என கேலியாய் நகைத்தார் பிசிராந்தையார்.

“என்ன பிசிராந்தையாரே உங்கள் நகைப்பின் அர்த்தம் புரியவில்லையே” என்றான் மன்னன்.

“மக்கள் அவதிப்படும் போது ஒரு அரசன் இன்புற்றிருப்பதும், எல்லாம் நலம் தான் என்பதும் நகைப்பிற்குரிய சேதி அல்லவா” என்று கூறி முன்னிலும் அதிகமாய் சிரித்தார்.

“பிசிராந்தையாரே, கேலி போதும், விஷயத்திற்கு வாரும்!”

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here